பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

156 C அ. ச. ஞானசம்பந்தன்

“கொல்லாமை’ என்று குறள் கூறும் வாழ்வை மேற்

கொள்ளும் பொழுதுதான் இது இயலும்.

கொல்லாமை என்று கூறினவுடன் ஏதோ பிற உயிர் களைக் கொல்லாமல் தாவர உணவு உண்பது என்று நம்மில் பலரும் நினைக்கின்றோம். மகாத்துமா காந்தி “நான் வயலன்ஸ் (Worl-Violence) என்ற சொல்லில் எவ்வளவு பொருளைக் கருதினாரோ அவ்வளவு பொருளும் இந்தக் கொல்லாமை” என்ற சொல்லில் இருக்கிறது. ‘அறவினை பாது எனின் கொல்லாமை’ என்று கூறு கிறது குறள், கொல்லாமையே அறவினை என்றால் அது எவ்வளவு ஆழ்ந்த பொருளுடையதாக இருக்கும் என்று கூறத் தேவை இல்லை. ‘கொல்லா நலத்தது நோன்மை’ என்றும் அந்நூல் கூறுகிறது என்றால், கொல்லாமை’ என்ற சொல்லின் பொருள் ஆழத்தை நன்கு அறிய வேண்டும். புலால் மறுத்தல் என்ற ஓர் அதிகாரத்தால் கொல்லாமையின் சாதாரணப் பொருளைக் கூறிவிட்டது குறள். எனவே, கொல்லாமை” என்ற அதிகாரம் முற்றிலும் சத்தியாக்கிரகி மேற்கொள்ள வேண்டிய ஒன்றையே குறிக்கிறது.

கொல்லாமை மேற்கொள்பவன் போரிடும் வீரனைக் காட்டிலும் அதிக மனோதிடம் உடையவனாக இருத்தல் வேண்டும். தின்ன வரும் புலியினைக் கண்டு ஓடாமல் நிற்பதும், தடியை வீசிக் கொண்டு அடிக்க வருகின்ற காவலரின் எதிரே அச்சமின்றி நிற்பதும் கொல்லாமை மேற்கொண்ட ஒருவனாலேயே முடியும். இத்தகைய ஒரு விரத்தைத்தான் அடிகளார் அனைவரிடமும் எதிர் பார்த்தார். ஆனால், அவரிடம் இருந்த அச்சமின்மை அளவிட்டறிய முடியாத அளவு நிறைந்திருந்தது. அந்த அளவு மனத்திட்பத்தைப் பிறரிடம் எதிர்பார்த்தல் இயலாத காரியம். தம்மைப் பொறுத்தவரை அவர் கடுமையான சில அளவு கோல்களைக் கொண்டிருந்தார். ஆனால், பிறரிடம் இத்தகைய கடுமையான மன நிலையை