பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/162

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறள் கண்ட வாழ்வு O 157

அவர் எதிர்பார்க்கவில்லை. பணிவே வடிவாகப் பெற்றிருந்தமையின், மகாத்துமா அனைவரிடமும் அன்பு பாராட்டினார்.

அவர்களை மன்னிக்கவும், பரிவோடு அவர்கள் செய்யும் காரியங்களை ஆராயவும் அவர் சித்தமாய் இருந்தார். கடவுளிடம் நம்பிக்கை அற்றவர்கள் ஆசிரமத்தில் அடிகளுடன் விருந்தினராகத் தங்கியதுண்டு. அடிகள் ஒரு முறை ஜின்னாவை விருந்துக்கு அழைத்து, அவர் மனம் கோணாமல் உண்பதற்காகப் புலாலும் மதுவும் தந்தார்.

முற்றிலும் மாறுபட்ட துறைகளில் உள்ள பலரும் அடிகளாரின் உயிர் நண்பராய் இருந்தனர். அடிகளாரின் முக்கியச் செயலாளரான பியாரிலால் 1952-ஆம் ஆண்டு, மார்ச்சுத் திங்கள், 15-ஆந் தேதி ஹரிஜனில் பின்வருமாறு: எழுதினார்: “நுண்மையான வாணிக அறிவுடைய வியாபாரிகளான சேத் ஜம்னலால் பஜாஜ், ஜி. டி. பிர்லா போன்றவர்களும், ஆசார்ய கிருபளானி போன்ற நம்பிக்கை அற்றவர்களும், வித்தல்பாய் பட்டேல் போன்ற தேர்ந்த அரசியல் அறிஞர்களும், ஆன்ம விடுதலையடைந்த ஆச்சார்ய வினோபா போன்றவர்களும், இராஜாஜி போன்ற நுண்ணறிவுடைய அறிஞர்களும், வேடிக்கை நிறைந்த சரோஜினி நாயுடு போன்றவர்களும் அடிகளின், “அந்தரங்க நட்பினர் குழுவில் இருப்பவர்கள்.’

இதனை எழுதிவிட்டு, “இத்துணை வேறுபாடு அமைந்த மக்களையும் ஒன்றாகச் சேர்த்து ஒரு மனிதர் ஆட்டிப் படைக்கிறார் என்றால், இதன் அடிப்படை எங்கேயுள்ளது?’ என்று கேட்கிறார் அந்தச் செயலாளர். பின்னர் அவரே விடையும் தருகின்றார். எடுத்த காரியத்தை நடைமுறைக்கு ஏற்ப ஆராய்ந்து பணி புரிதலின், வியாபாரிகள் அவரை விரும்பினர். என்றும். புதுமை காணப் பழமையை உடைத்தெறியும் அவருடைய.