பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/165

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 0 அ. ச. ஞானசம்பந்தன்

சொற்பொழிவில் மட்டும் அன்றி, வாழ்க்கையில் எல்லாப் பகுதிகளிலும், எல்லாத் துறைகளிலும் பெரிதும் வேண்டப் படும். அன்பு செய்வதிலுங்கூட ஒர் எல்லை உண்டு; அந்த எல்லையை மீறிச் செல்வதானால் தீமையே விளையும். ‘என்ன! அன்பு செய்வதிற்கூட ஒர் எல்லை உண்டா? அன்பால் உலகம் வாழ்கிறது. அன்பும் சிவமும் இரண்டு என்பர் அறிவிலார்,’ என்றெல்லாம் கூறிவிட்டு, இப்பொழுது அன்பையும் அளந்து செய்ய வேண்டும் என்று கூறுவது முறையா?” என்று சிலர் வினவலாம்.

அன்பு செய்தல், பக்தி செய்தல் முதலிய எதிலுமே அளவு மீறிச் செல்கின்றவர் உண்டு. அவர்கள் மிகப் பெரியவர்கள். சாதாரண மக்களுக்கு உரிய சட்டம் அவர்களைக் கட்டுப்படுத்துவது இல்லை. அதேபோல அவர்கள் வாழ்க்கையை ஒட்டிப் பிறர் வாழ்வை அமைத்துக்கொள்ள முடியாது; வேண்டுவதும் இல்லை. நம்மைப் போன்ற சாதாரண மக்களைப் பொருத்த மட்டில் எதிலுமே ஓர் எல்லை வேண்டும். இந்த எல்லையை மீறும் பொழுது தவறாமல் தொல்லை உண்டாகும்.

எல்லை மீறிச் செல்கின்றவர் யாவராயினும் தொல்லையை அனுபவிக்கத்தான் வேண்டும். அவர்கள் பெரியவர்களாயினும், சிறியவர்களாயினும் இயற்கையின் இந்தச் சட்டத்திலிருந்து விடுதலை பெற முடியாது! விராவரும் புவிக்கெலாம் வேதமேயன இராமனைப் பெற்றவன்தான் தசரதன். வயது முதிர்ந்த காலத்தில் பெற்ற பிள்ளைகளாகலின், ஒரளவு அதிகப்படியான அன்பு செய்தலும் முறைதான். என்றாலும், அதிக அன்பு, செய்வதிலும் ஒர் அளவில்லாமல் சென்றுவிட்டான் தசரதன். சக்கரவர்த்தியாய் இருக்கின்ற ஒருவனுக்கு, இரண்டு வகைக் கடமைகள் உண்டு. ஒன்று, அவன் தன்னுடைய நலம் தீங்குகளைப் பாராட்டாமல் தன்னால் ஆளப்படுகின்ற மக்களின் நலம் ஒன்றையே கருதி வாழ்வ.