பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறள் கண்ட வாழ்வு 0 161

தாகும். இரண்டாவது, தன்னுடைய குடும்பத்தாரிடம் தந்தை என்ற முறையில். அல்லது குடும்பத் தலைவர் என்ற முறையில் அன்பு பாராட்டுவதாகும். இவ்விரண்டு வகைக் கடமைகளுள் ஏதாவது ஒன்றை மிகுதியாகச் செய்யத் தொடங்கினால் மற்றையதொன்று துன்பம் அடைய நேரிடும். ஆதலாலேதான் இவை இரண்டையும் மன்னனாய் இருப்பவன் அளவறிந்து செய்ய வேண்டும் என்று நீதி நூல்கள் கூறுகின்றன.

நின் சிறுவர் நால்வரினும் கரிய செம்மல் ஒருவனைத் தந்திடுதி,’ என்று விசுவாமித்திரன் கேட்ட பொழுதே தசரதன் ‘'கண்ணிலான் பெற்று இழந்தான் என உழந்தான் கடுந்துயரம். பின்னர்க் கைகேயி சூழ்வினை யால் இராமன் கானகம் செல்ல நேர்ந்தது. தசரதன் அக்கொடுமையை எவ்வாற்றானும் தடுக்க முடியாதவன் ஆகிவிட்டான். இன்னும் சொல்லப் போனால், இராமன் முதலியவர்கள் கானகம் சென்றதை அவன் அறியக்கூட இல்லை. மயக்கம் தெளிந்த நிலையில் ஒரு சிலர், ‘தேர் வந்து விட்டது,’ என்று கூறினார்கள். அணித்தே நின்ற வசிட்டனை, ‘இராமன் வந்தானோ?’ என்று வினவினான் மன்னன். விடை கூற மனமில்லாத வசிட்டன் வெளியே சென்றுவிட்டான். உடனிருந்த சுமந்திரனை நோக்கிக் குறிப்பாகப் பார்த்தான் தசரதன். சுமந்திரன், வேய் உயிர் கானம் தன்னில் போயினான்,’ என்றான்; என்ற போழ்தே ஆவி நீத்தான் தசரதன்.

சக்கரவர்த்தியாகிய தசரதன் அருமை மைந்தனாகிய இராமனிடத்தில் அன்பு வைப்பது முறை என்றாலும், ஒரளவு அதிகமான அன்பு வைப்பதும் தவறில்லை என்றாலும், எல்லை மீறிய அன்பு வைப்பதானது நுனி மரத்தில் ஏறினவன் அதற்கு மேலும் ஏற முயல்வதையே ஒக்கும் தசரதனைப் பற்றிக் கூற வந்த கம்பநாடன், ‘மைந்தனை அலாது உயிர் வேறு இலாத மனைன்’’ என்று சொல்கிறான். எனவே, மைந்தர் மாட்டுக் கொண்ட அன்பேயாயினும் எல்லை மீறினால் தீமை பயக்கும் என்பதை நன்கு அறிகின்றோம்.

கு.- 11