பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 0 அ. ச. ஞான சம்பந்தன்

எந்த ஒரு செயலிலும் எல்லை மீற வேண்டிய தொல்லை ஏன் ஏற்படுகிறது? இதன் காரணத்தை அறிய மனித மனத்தின் விந்தையைக் கொஞ்சம் ஆராய வேண்டும். மிக்க ஆர்வத்தோடு ஒரு விஷயத்தைத் தொடங்குகின்றவர் பல சமயங்களில் அந்த ஆர்வம் காரணமாக எங்கே நிறுத்துவது என்று தெரியாமல் தவிக்கின்றார். முதலில் கூறிய சொற்பொழிவாளரும் எப்பொழுது எங்கே சொற்பொழிவை நிறுத்த வேண்டும் என்பதை அறிந்து கொள்ளாமல், மக்களுக்கு வெறுப்புத் தட்டுகிற வரையில் சென்று விடுகின்றார். தசரதனும் எந்த அளவில் மகன் மாட்டுக்கொண்ட அன்பை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்பதைத் தெரியாமல் உயிரையே இழந்து விடுகின்றான்.

சாதாரண மக்கள் ஒரு புறம் இருக்க, இந்த உண்மையை மறந்து அதனால் உயிரையும் விட்ட மன்னர் பலர் உண்டு உலக வரலாற்றில். உலகம் போற்றும் ஒப்பற்ற பெரு வீரனாகிய நெப்போலியன் ரஷ்யாவின் மேல் படையெடுத்துச் சென்றான். மாஸ்கோ நகரம் அடைகின்ற வரையில் ஒப்பற்ற வெற்றிகளைப் பெற்றான். நுனி மரத்துக்கு வந்து விட்டோம்! இனியும் மேலே ஏறத் தொடங்கினால் உயிருக்கு ஆபத்து விளையும்’ என்ற உண்மையை மறந்ததனால் சரித்திரப் பிரசித்தி பெற்ற நெப்போலியனின் ரஷ்யப் படையெடுப்பு, உலக முழுவதும் எள்ளி நகையாடுகின்ற கேலிக்கூத்தாய் முடிந்தது நம் காலத்தில் உலகை ஆட்டிப் படைத்த ஹிட்லருங்கூட குறள் கண்ட இந்த விதிக்கு விலக்கல்லன். நுனி மரம் வரை ஏறியதோடு அமையாமல் அதற்கு மேலும் ஏற முயன்றதால், ஹிட்லர் அடைந்த படு நாசத்தைச் சரித்திரம் எடுத்துக் கூறும்.

நேர் மைக்கும் நெஞ்சு உரத்துக்கும் புகழ் வாய்ந்த தமிழ்ப்புலவர் கூட்டத்தில் நக்கீரர் என்ற பெயருடன் ஒருவர் அல்லாமல் பலர் இருந்திருக்கின்றனர். அவருள் ஒரு நக்கீரன் மிக்க நெஞ்சு உரம் வாய்ந்தவனாய், தான்