பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/168

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறள் கண்ட வாழ்வு 0 163

உண்மை என்று கருதும் ஒன்றுக்காகப் போராடும் இயல்புடையவனாய் இருந்திருக்கிறான். அவன் காலத்தில் மதுரையை ஆட்சி செய்த பாண்டிய மன்னன் ஒருவனுக்கு ஒர் ஐயம் தோன்றியது. அம்மன்னன் மறுநாள் சங்கப் புலவர்களை அழைத்து, ‘புலவர்களே, என் மனத்திலுள்ள ஐயத்தையும் அதனைப் போக்குதற்குரிய விடையையும் தருபவர் எவராயினும், அவருக்கு உரியதாகும் ஆயிரம் பொன் கொண்ட இந்த முடிச்சு’ என்று ஒரு பொன் முடிச்சைத் தமிழ்ச் சங்க மண்டபத்தில் தொங்க விட்டு விட்டான்.

ஆலவாயின் அவிர்சடைக் கடவுளுக்கு வழிபாடு செய்யும் தருமி என்னும் அந்தணச் சிறுவன், வறுமையால் வாடி இறைவனை வேண்டினான். அவன் விருப்பத்தை நிறைவேற்ற விரும்பிய இறைவன், “கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத் தும்பி!’ என்று தொடங்கும் ஒரு பாடலை எழுதித் தருமியினிடம் தந்தான். தருமி மகிழ்ச்சியோடு அதனை எடுத்துச் சென்று மன்னனிடம் காட்டினான். அரசனது ஐயத்தைப் போக்கும் பொருள் அப்பாடலில் இருந்தமையின், மன்னன், ‘நீ சென்று அப்பொன் முடிச்சை எடுத்துச் செல்க,’ என்று கட்டளை இட்டு விட்டான்.

தருமி பொன் முடிச்சை அவிழ்க்கச் செல்லும் நேரத்தில், ஏழைச் சிறுவனே, பொன் முடிச்சைத் தொடாதே!’ என்ற இடிக்குரல் கேட்டு அஞ்சிவிட்டான். நக்கீரன், ‘பிழை நிறைந்த இப்பாடலை உனக்குப் பாடித் தந்த புலவனை அழைத்து வா!’ என்று ஏவினான். இறைவன் புலவன் வேடத்தில் வந்து நக்கீரனுடன் வாதாடிய வரலாற்றைத் தமிழ் உலகம் நன்கு அறியும்.

ஆனால், இவ்வரலாற்றிலே நக்கீரனுடைய அஞ்சா நெஞ்சத்தைக் கண்டு அவனுக்கு அஞ்சலி செலுத்து கின்றவர்கள் ஒன்றை மறந்து விடுகின்றார்கள். ‘தலைவியின் கூந்தல் இயற்கை மணமுடையது’ என்று பாடல் சொல்லிற்று. நக்கீரன் அதனை மறுத்துப் பெண்