பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குறள் கண்ட வாழ்வு O 13


அவா என்பது எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பு ஈனும் வித்து

என்று கூறுகின்றது.

வேண்டும் என்பது இவ்வளவு துன்பந்தரும் ஒன்று என்றால், இதன் எதிராக உள்ள வேண்டாமை உறுதி. யாக எதிர்ப் பலனைத் தர வேண்டுமே! ஆம்! அவ்வாறு தான் குறள் கூறுகின்றது.

வேண்டாமை அன்ன விழுச்செல்வம் ஈண்டு இல்லை;
யாண்டும் அஃது ஒப்பதுஇல்

என்பது குறள்.

'வேண்டாமை என்பதைப் போன்ற மிகப் பெரிய துய்மையானதும் உயர்ந்ததுமான செல்வம் இவ்வுலகில் இல்லை. ஏன்? வேறு எந்த உலகிலும் இல்லை,' என்பதே இக் குறளின் பொருள்.

இப்பொழுது வேறு ஒரு வகையில் பார்ப்போம். எதுவும் 'வேண்டா' என்று ஒருவன் கூறத் தொடங்கினால் அவனுக்கு ஏதேனும் கவலை உண்டா? வேண்டும் என்றால் வேண்டியது கிடைக்காதபொழுது கவலை, அறிவை இழத்தல் முதலிய தொல்லைகள் ஏற்படும். வேண்டா என்று தொடக்கத்திலேயே கூறிவிட்டால், அவனுக்கு, எவ்வகையான துயரமும் இல்லை.

வேண்டாமையை அணிகலனாகக் கொண்டு ஒருவன் வாழத் தொடங்கிவிட்டால் கடவுளும் அவனை அசைக்க முடியாது. ‘கம்ப மத யானை கழுத்து அகத்தின் மேல் இருந்து இன்பு அமரும் செல்வமும் இவ்வரசும் யான் வேண்டேன்; ஆனாத செல்வத்து அரம்பையர்கள் தற்சூழ வானாளும் மண்ணரசும் யான் வேண்டேன்; இந்திர லோகம் ஆளும் அச்சுவை பெறினும் வேண்டேன்,’ என்று ஆழ்வார்கள் பாடுகின்றார்களே, அதன் பயன் என்ன