பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16 O அ. ச. ஞானசம்பந்தன்


பதி இழந்தனம் பாலனை இழந்தனம் படைத்த
நிதி இழந்தனம் இனி எமக்கு உளது என நினைக்கும்
கதி இழக்கினும் கட்டுரை இழக்கிலேம் என்றான்;
மதி இழந்து தன் வாய் இழந்து அருந்தவன் மறைந்தான்'

“நாட்டை இழந்தேன்; குழந்தையை இழந்தேன்; செல்வத்தை இழந்தேன். இத்துணையும் ஏன் இழந்தேன்? இனி வீடுபேற்றை (மோட்சத்தை) அடையலாம் என்று நினைத்தேன். அந்த மோட்சத்தையே (கதி) இழக்கினும் சரி! என் மொழி தவற மாட்டேன்!” என்றான். அறிவை, யும், பின் சொல்லும் வகையையும் இழந்து முனிவன் மீண்டான்.

வேண்டாமை' அன்ன விழுச்செல்வம் ஈண்டில்லை;
யாண்டும் அஃதொப்பது இல்

என்பது இவற்றால் விளங்குகின்றதன்றோ?