பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32 O அ. ச. ஞானசம்பந்தன்


தவிர வேறு பஸ்கள் அனைத்தும் வந்து வந்து போகும். இது வாழ்க்கையில் காணும் அனுபவம்.

திருக்குறிப்புத்தொண்டர் தம் வாழ்வில் மேற்கொண்ட செயல் மிகச் சாதாரணமானதுதான். ஆனாலும், அவருடைய இந்தச் செயலுக்குக்கூட ஒரு சோதனை வந்துவிட்டது. ஒரு நாள் வயது முதிர்ந்த, அடியார் ஒருவர் வந்தார். அவருடைய உடம்பில் இருந்த, ஒரே துணியைத் தவிர, வேறு உடை ஒன்றும் அவரிடம் இல்லை. திருக்குறிப்புத்தொண்டர் அவரிடம் ஓடோடிச் சென்றார். பெரியீர், வணக்கம்! உங்கள் உடம்புடன் ஒட்டிக் கொண்டிருக்கும் இந்த உடையைக் கொடுத்தால், நான் இதனை வெளுத்துத் தருகிறேன்,’ என்றார். வந்த பெரியவர், 'என்னிடத்தில் இந்த ஒரே துணிதான் இருக்கின்றது. இதை எடுத்துச் சென்று வெளுத்துத் தருவதில் எனக்குத் தடை ஒன்றும் இல்லை. ஆனால், சூரியன் மலைவாயில் விழும் மாலைக்காலம் வருவதற்குள் இதனைச் சலவை செய்து தரவில்லை என்றால், இந்தக் கிழ உடம்புக்குத் தீமை செய்தவராவீர். இதற்குச் சம்மதமானால் எடுத்துச் செல்லலாம்,’ என்றார்.

அதற்கு உடன்பட்டுத் திருக்குறிப்புத்தொண்டர் அடியாரின் கந்தையை வாங்கிக்கொண்டு துணி துவைக்கும் துறைக்கு வந்தார்; அதை உவர் மண்ணில் நனைத்து நன்கு துவைத்தார். கந்தை சுத்தமானவுடன் அதனைக் காயவைக்க முற்பட்டார். ஆனால், அதுவரை வெளி வாங்கி நிர்மலமாய் இருந்த ஆகாயம் திடீரென்று மூடிக்கொண்டது. சாதாரண மூட்டமாய் இல்லை அன்று; ‘திசை மயங்க வெளி அடைத்துச் செறிமுகிலின் குழாம் மிடைந்து விட்டது!’

திடீரென்று பிடித்த மழை விடவே இல்லை. ஓயாது பொழியும் அந்த மழை விட்டு விடும் என்ற நினைவில் அந்த ஏகாலியார் காத்து நின்றார். மழை விடவே,