பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

34 O அ. ச. ஞானசம்பந்தன்

வருந்துவார்களாம். யார் தெரியுமா? தமக்கு வரும் பழியை நாணுகின்ற பண்புடைய பெரியோர்கள்.

இக்கருத்தை மிக அழகாகக் கூறுகின்றது குறள்:

தினைத் துணை யாம் குற்றம் வரினும் பனைத் துணையாக்
கொள்வர் பழி நாணு வார்.”

குறள் கண்ட வாழ்வு வாழ்ந்த ஏகாலியார் தாம் செய்த சிறு தவற்றைப் பெரிதாகக் கொண்டு அதற்குத் தண்டனைக்காக அத்துணியை அடிக்கும் கல்லில் தம் தலையையே ஏற்றிப் புடைக்க முடிவு செய்து அவ்வாறே செய்யவும் தொடங்கினார்.