பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

38 O அ. ச. ஞானசம்பந்தன்

வர்கள் மிக நீண்ட காலம் நோய் நொடி இன்றிச் சிறந்த உடலுரத்துடன் வாழ்வார்களாம்.

ஒரு முறை, இங்ஙனம் பழுத்த ஒரே பழம் அதியனின் கையில் கிடைத்தது. வேறு யாராக இருப்பினும் மிகவும் ஜாக்கிரதையாக அதனை எப்படியும் உண்டிருப்பார்கள். ஆனால், அதியன் அதை உண்பதற்காகக் கையில் வைத்துக் கொண்டிருக்கும் பொழுது அம்மையார் ஒருவர் அவனைக் காண வந்தார். வந்தவர் யார் என்று நினைக்கிறீர்கள்? அறிவு ஆற்றல்களோடு வயதிலும் முதிர்ந்தவராகிய அவ்வைப் பாட்டியாரே! பல்லாண்டுகள் இவ்வுலகில் வாழ்ந்துவிட்ட அந்தக் கிழவியாருக்கு அந்தப் பழம். தேவை இல்லைதான்.

என்றாலும் என்ன! அதியனைப் பார்த்துவிட்டுப் போக வந்த அவரை அதியன் வரவேற்று உபசரித்தான். எப்படி உபசரித்தான்? தன் கையில் இருந்த அந்த அதிசய மான நெல்லிக் கனியை அவருக்குக் கொடுத்தான். அதன் பெருமையைப் பற்றி ஒரு வார்த்தைகூடக் கூறவில்லை அவன். சாதாரண நெல்லிப் பழம் என்று நினைத்து வாங்கி உண்டுவிட்டார் பாட்டியார்.

பழத்தை உண்ட பிறகுதான் அதனுடைய சுவை சாதாரண நெல்லிக் கனியின் சுவை அன்று என்பதை அறிந்தார் அவ்வையார். அப்பழத்தின் தனிச் சிறப்பு யாது என்று அதியனை விசாரித்தார். வள்ளல் அதியமான் பழத்தின் வரலாற்றைக் கூறினான். அசந்து போய் விட்டார் அவ்வையார். அதியமான் அதிக அன்பு. உடையவன், வள்ளல் என்பது அவ்வையாருக்கும் தெரியும். ஆனால், ‘அமிர்தம்' போன்ற நெல்லிக் கனியைக்கூடத் தான் உண்ணாமல் பிறருக்கு வழங்குவான் என்று அவர் கனவிலும் கருதவில்லை. உடனே அமிழ்தம் கிடைத்த வரலாறு நினைவிற்கு வருகின்றது பாட்டியாருக்கு. அமிழ்தம் கிடைத்தால் ஒருவருக்கும் பங்கு தாராமல்