பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/47

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
8. பலாவும் எட்டியும்

ல்ல மனிதர் பலர் உண்டு இந்த நானிலத்தில். ஆனால், நல்ல மனிதர் அனைவரும் நல்ல முறையில் பேசத் தெரிந்தவர் என்று கூற முடியாது. 'மனிதர் மிகவும் நல்லவர் தான்; ஆனால், தம்முடைய வாயால் பகையை வளர்த்துக் கொள்கிறார்,’ என்று பேசப்படுவதைக் கேட்கிறோம். இதன் கருத்து யாது? நல்லவர் பகையைப் பெற முடியுமா? பெற்றாலும் அதனை உடனே போக்கி விடாமல் வளர்த்தல் கூடுமா?

பகையை வளர்த்துக் கொள்பவர்களை நல்லவர்கள் என்று சமுதாயம் கூறுவதன் கருத்து யாது? மன நினைவால், பண்பால், பிறருக்கு நன்மை செய்யும் இயல்பால், நல்லவர் என்ற பெயரைப் பெறுகின்றார் ஒருவர். என்றாலும், இவ்வளவு நற்பண்புகளும் உடைய அவருக்கு, நாக்கில் சனிசுவரன் புகுந்து கொள்கிறான். அவர் வாயைத் திறந்து பேச ஆரம்பித்தால் போதும்! நல்ல நண்பர்களும் பகைவர்களாகி விடுவார்கள். அவர்கள் மனத்தில் ஒரு தீமையும் இல்லாமலே வாய்ப் பேச்சின் கொடுமையால் பகையை வளர்த்துக் கொள்பவர்கள்.

இம்மாதிரி மனிதர்கட்கு நேர்மாறான வகையாரும் உண்டு. அவர்கள் மனத்தில் தீய எண்ணம் தவிர வேறு எண்ணம் தோன்றுவதே இல்லை. எப்பொழுது பார்த்தாலும் யாரை ஒழித்துக் கட்டித் தாங்கள் பயன்