பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/51

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குறள் கண்ட வாழ்வு O 45


இருப்பது கடினம். தூய மனமும் இன்சொல்லும் சேர்ந்தால் ஒழிய இக்காரியத்தைச் செய்தல் இயலாது. முள்ளும் சக்கையும் இல்லா பலாப்பழமாக இருப்பவரே இக்காரியத்தைச் செய்து முடிக்க முடியும்.

அதியமானுக்கு இப்படி ஒருவர் தேவைப்பட்ட பொழுது ஒருவர் வந்து சேர்ந்தார். அவர்தாம் நாம் கேள்விப்பட்டுள்ள ஒளவையார். பிற்காலத்து ஒளவையாரினும் வேறுபட்டவர் அவர். அவர் அக்காலத் தமிழ் நாடு முழுவதையும் பன்முறை சுற்றியவர். அவர் அதியனிடம் வந்து சேர்ந்தவுடன் தன் கவலையை விட்டான் அதியன் தொண்டைமானிடம் தூதாக ஒளவையாரை அனுப்ப முடிவு செய்தான் அதியன்.

இனிய சொற்களைக் கூறும் பண்பும், அந்தச் சொற்களை நகைச் சுவையோடு சொல்லிக் காரியம் சாதிக்கும் இயல்பும் ஒளவையாரிடம் இருந்தன. தொண்டைமானிடம் தூதாகச் சென்றார் அவர். ஒளவையாருக்குத் தனது படைக்கலச் சாலையை மிகவும் பெருமையுடன் காட்டினான் தொண்டைமான். முழுவதையும் பார்த்து மீண்ட பிறகு, ஒளவையார், 'அடடா! உன்னுடைய படைக்கலச் சாலையில் ஆயுதங்கள் அனைத்தும் நல்ல பளபளப்புடன் நெய் பூசப் பெற்று, மயில் பீலி அணிந்து, காவல் பொருந்திய இடத்தில் உள்ளன! அங்கே (அதியனிடம்) எல்லா ஆயுதங்களும் பகைவரைக் குத்தி, துணி வளைந்து கொல்லன் உலைப். பட்டறையில் உள்ளன!’ என்னும் கருத்தமைய,

இவ்வே, பீலி அணிந்து, மாலை சூட்டிக்
கண்டிரள் நோன் காழ் திருத்தி, நெய் அணிந்து
கடி உடை விய நகர் அவ்வே; அவ்வே,
பகைவர்க் குத்திக் கொடு நுதி சிதைந்து
கொல்துறைக் குற்றில மாதோ !“

என்னும் இவ்வொரு பாடலைப் பாடியதன் மூலம். ஒளவையார், குறள் கூறும் வாழ்வைக் காட்டினார்.