பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

46 O அ. ச. ஞானசம்பந்தன்


தூதுவர் இலக்கணம் கூற வந்த குறள், சொல்ல வேண்டியவற்றை வி டா து தொகுத்துச் சொல்லி, பொருத்தமில்லாது குற்றம் உண்டாக்கும் செய்திகளைக் கறாமல் விடுத்து, சொல்லும் முறையில் சிரிக்கும்படி கூறித் தன் தலைவனுக்கு நன்மை பயப்பவனே தூதுவன்,’ என்ற கருத்தில்,

தொகச் சொல்லித் தூவாத நீக்கி நகச் சொல்லி
நன்றி பயப்பதாம் தூது”

என்று பாடுகிறது.

தம் தலைவனாகிய அதியமானுக்கு நன்மை செய்து, அவன் மதிப்பைக் குறைக்கும் சொல் ஒன்றைக் கூடக் கூறாமல், அவன் ஆயுதங்கள் கொல்லன் பட்டறையில் உள்ளன என்று சிரிப்பு உண்டாகும்படியும் கூறினார். அம்மட்டோ! கொல்லன் பட்டறையைக் கூறினமையின், ஓயாது போர் செய்யும் வீரன் அதியன் என்பதையும் எடுத்துக் கூறிவிட்டார். இவ்வளவையும் சொல்வதை விடப் பெரியது, தொண்டைமான் சினம் கொள்ளாத முறையில் இனிமையாக இவற்றைக் கூறியதுதான்.