பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

48 O அ. ச. ஞானசம்பந்தன்


வந்த பழந்தமிழ் நூலாகிய 'இறையனார் களவியல் உரை' சாவின் சாதல்; நோவின் நோதல்; பிரிவு நனி. இரங்கல்; நன்பொருள் கொடுத்தல்’ என்றெல்லாம் கூறிச், செல்கிறது; அதாவது, நண்பர்களுக்குச் சாவு வந்த விடத்தில் தானும் சாதலும், நோய்வந்தவிடத்துத் தானும் வருந்துதலும், பிரிவை வெறுத்தலும், வேண்டும்பொழுது பொருள் கொடுத்து உதவி செய்தலும் நண்பர்கட்கு இலக்கணம் என்று கூறுகின்றது.

வாழ்க்கையின் எல்லாத் துறைகளிலும் நுழைந்து பார்த்துத் தம்முடைய சிறந்த அனுபவத்தில் கண்ட உண்மைகளை நம் முன்னோர் கூறியிருப்பது போலவே 'நட்பு' என்ற துறையிலும் விரிவாகக் கூறி உள்ளனர். அதிலும் வாழ்க்கைக்கு இலக்கணம் வகுத்த குறள், நட்புப்பற்றி ஐந்து அதிகாரங்கள் பேசுகின்றது என்றால் அதன் பெருமையைக் கூறவும் வேண்டுமா! வார்த்தையை அளந்து பேசும் குறள், பயனில்லாத சொல்லைப் பேசவே கூடாது என்று நமக்கெல்லாம் கட்டளை இட்ட அதே குறள், நட்பைப்பற்றி ஐந்து அதிகாரம் பேசுகின்றது என்றால், வாழ்க்கையில் நட்பு எத்தனை இன்றியமை யாதது என்று கருதி இருத்தல் வேண்டும்? நட்பு, நட்பாராய்தல், நட்பில் பழமை பாராட்டல் என்ற மூன்று அதிகார மூலம் நட்பின் சிறப்பைக் கூறிவிட்டு, தீ நட்பு, கூடா நட்பு என்று இரண்டு அதிகாரங்களால் நட்புச் சரியில்லையானால் விளையும் தீமைபற்றியும் கூறுகின்றது.

உலகில் எல்லா நாடுகளிலும் எல்லாக் காலங்களிலும் ஒப்புயர்வற்ற நண்பர் வாழ்ந்து வந்துள்ளனர். ஆனால், இவர்கள் தொகை மிகவும் குறைவானதுதான். அதனாலேதான் இவர்கள் இலட்சியத்தன்மை பெற்றவர் களாகிவிடுகின்றனர். உலக இலக்கியங்களிலும் ஆசிரியர்கள் இத்தகைய நட்பைப் படம் பிடிததுக் காட்டியுள்ளனர் மேனாட்டு இலக்கியத்தில் இடம் பெற்ற. 'இரு நகரங்களின் கதை (A Tale of Two Cities) என்ற