பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/55

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குறள் கண்ட வாழ்வு O 49


நூலில் வரும் 'சிட்னி கார்ட்டன்’ (Sidney Carton) இத்தகைய நட்புக்கு ஒர் எடுத்துக்காட்டாவர்.

தமிழ் இலக்கியத்தில் இம்மாதிரிப் பாத்திரங்களைப் படைத்துக் காட்டிய பெருமை பலருக்கும் உண்டு. இலக்கியத்தில் கற்பனையாகத் தோன்றும் நண்பர்களை யல்லாமல் உண்மையாகவே வாழ்ந்த பெருமக்களும் உண்டு. நட்புக்கு வள்ளுவர் கூறிய இலக்கணம் அனைத்தும் பொருந்த வாழ்ந்த இரண்டு பெருமக்களைப் பெற்ற பெருமை உடையது இத்தமிழ் நாடு சாதாரண மாக நண்பர்கள் என்பவர்கள் ஒத்த குடியும், செல்வ நிலையும், பண்பாடும் உடையவர்களாய் இருத்தல் வேண்டும் என்று கூறுவர். ஆனால், ஒர் அரசனும் ஆண்டியும் மிக நெருங்கிய நண்பர்களாய் இருந்தார்கள் என்று கேள்விப்பட்டிருக்கின்றோமா?

கோப்பெருஞ்சோழன் என்பவன் சோழ வள நாட்டை இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னர் ஆட்சி செய்த சோழ மன்னர் நற்பண்புகள் பலவும் நிறைந்தவன் சோழன். நல்ல குணம் உடையவனாதலின் வீரம் எப்படியோ என்று ஐயுற வேண்டா. வீரத்திலும் சோழன் யாருக்கும் குறைந்தவன் அல்லன் அவனுடைய சிறந்த குணங்கள் மலையில் இட்ட விளக்கைப் போலப் பிற நாடுகளிலும் ஒளி விடத் தொடங்கிற்று அவன் காலத்தில் மதுரையில் 'பிசிராந்தையார்’ என்ற புலவர் ஒருவர் வாழ்ந்தார் அவர் சிறந்த புலவராயினும் வறுமைமிக்கவர்.

சிறந்த பண்பு உடையவர்களைப் பாடுவது புலவர் கட்கு வழக்கம் கோப்பெருஞ்சோழனுடைய நற்பண்பு பிசிராந்தையாரின் காதுகட்கும் எட்டியது. எனவே, அவனுடைய குணங்களில் ஈடுபட்ட அவர், அவன் மாட்டு அன்பு கொண்டார். ஒருவரிடம் அன்பு ஏற்பட்டு நட்புச் செய்கின்றோம என்றால், இரண்டு காரணங்

கு - 4