பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

52 O அ. ச. ஞானசம்பந்தன்


தாமும் வடக்கிருந்து உயிரை விட்டுவிட்டார் அந்த ஒப்பற்ற நண்பர். இத்தகைய நட்பைக் கேள்விப்பட்டுத் தான் போலும் குறள்,

புணர்ச்சி பழகுதல் வேண்டா; உணர்ச்சிதான்
நட்பாம் கிழமை தரும்”

என்று கூறிற்று! ‘உண்மை நட்புக்கு எதிர் நின்று பழக வேண்டும் என்பதில்லை. உள்ளத்து உணர்வே நட்பை உண்டாக்கும்,’ என்ற இந்தக் குறள் கண்ட வாழ்வை வாழ்ந்து காட்டிய பிசிராந்தையாரும் கோப்பெருஞ், சோழனும், அணுக்குண்டு சகாப்தத்திற்கு நல்ல வழிகாட்டிகள் அல்லரோ?