பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

56 O அ. ச. ஞானசம்பந்தன்


நூற்றுக்குத் தொண்ணுளற்றொன்பது பேர் 'வெளுத்து வாங்கினார்! மழை போலப் பொழிந்தார்! பிச்சு வாங்கி விட்டார்!’ என்றெல்லாம் சொல்வார்களே தவிர, “என்னையா சொன்னார்: அதைக் கொஞ்சம் சுருக்கித் தான் சொல்லுங்களேன்?" என்று கேட்டால், ஒன்றும் சொல்லத் தெரியாமல் விழிப்பார்கள். இதிலிருந்து ஓர் உண்மை புலப்படும். ஒரு நூலைக் கற்பது எவ்வளவு கடினமோ, அவ்வளவைவிடக் கடினமானது ஒருவர் சொல்லுவதைக் கேட்டு அதனை விளங்கிக்கொள்வது என்பது.

பிறர் சொல்லுகின்றவற்றைப் புரிந்துகொள்ளக் கூடியவர்களை நுண்மையான கேள்வி ஞானம் உடையவர்கள் என்று குறள் சொல்கிறது. நுண்மை என்பது மிகச் சிறிய அல்லது கூர்மையான பொருளைக் குறிக்கும். எனவே, கூர்மையான கேள்வி ஞானத்தை துண்மையான கேள்வி ஞானம் என்று சொல்லலாம். அதாவது, எவ்வளவு கடினமானவற்றைக் கேட்டாலும் புரிந்து கொள்ளக் கூடிய சத்தியே ஆகும் இது. இத்தகைய கேள்வி ஞானம் உடையவர்கள் ஒரு நாளும் தங்களைத் தாங்களே புகழ்ந்து கொள்ளும் காரியத்தைச் செய்யமாட்டார்கள். அது மட்டுமன்றி, எந்தச் சந்தர்ப்பத்திலும் பணிவான மொழிகளையே பேசுவார்கள் என்றும் குறள் கூறுகின்றது. "நிறை குடம் நீர் தளும்பாது," என்ற பழமொழியும் இதே கருத்தைத்தான் கூறுகின்றது.

சுந்தரமூர்த்தி சுவாமிகள் என்று வழங்கப்படும் நம்பியாரூரர், சிவபெருமானிடம் நண்பராய்ப் பழகி, நண்பருக்குரிய உரிமையோடு வாழ்ந்து வந்தார். சைவர்கள் போற்றுகின்ற நாயன்மார் நால்வருள் நம்பியாரூரரும் ஒருவர். திருநாவலூரிலே பிறந்த அவரை அந்தப் பிராந்தியத்தை ஆட்சி செய்த மன்னராகிய நரசிங்க முனையரையர் என்னும் அரசர், சுவீகாரப் பிள்ளையாக வளர்த்து வந்தார். எல்லையில்லாத கல்விக் கடலைத் தம்