பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/64

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

58 O அ. ச. ஞானசம்பந்தன்


பணியை மேற்கொண்டிருந்தார். அதனை அறிந்த சுந்தர மூர்த்திகள் ‘திருநாவுக்கரசரைப் போன்ற பெரியவர். கையினால் தொண்டு செய்த ஊரில், நான் காலால் நடந்து செல்வது முறை அன்று," என்று கருதி, அவ்வூரின் பக்கத்தே உள்ள சித்தவடமடம் என்ற இடத்தில் அன்றிரவு தங்கிவிட்டார்.

நடு இரவு நேரத்தில் சுந்தரமூர்த்திகளின் தலைமேல் ஒருவருடைய கால் பட்டது. சுந்தரர் எழுந்து, ‘ஐயா, உங்களுடைய கால் என் தலையின் மேல் படுகிறது,' என்று கூறினார். அதற்கு அந்தப் பெரியவர், 'வயதாகி விட்ட காரணத்தால் திக்குத் திசை தெரியாமல் உன் தலையின் மேல் மிதித்துவிட்டேன்!' என்று கூறினார். நம்பியாரூரர் வேறோர் இடத்தில் தலையை வைத்துப் படுத்தார். சற்று நேரங்கழித்து அந்த இடத்திலும் கிழவருடைய கால் பட்டது. மறுபடியும் சுந்தரர் கேட்க, கிழவர் அதே விடையைத் திருப்பிக் கூறினார். ஒரு சிறிதும் அதுபற்றி வருந்தாத சுந்தார், மற்றோரிடத்தில் சென்று படுத்துக் கொண்டார். ஆனால், கிழவர் அவரை விட்டபாடில்லை; தாம் படுத்திருந்த இடத்திலிருந்தபடியே கால்களைச் சுந்தரர் தலையின்மேல் நீட்டினார் கிழவர். இவ்வாறு செய்தவர் யார் என்று நினைக்கிறீர்கள்? “பாதாளம் ஏழினுக்கு அப்பால் திருவடிகளை" உடைய இறைவனேதான்! ஆனால், சுந்தரமூர்த்திக்கு இங்ங்னம் தம்மை உதைத்தவர் யார் என்பது தெரியாது.

வசதி மிக்க குடும்பத்திலே பிறந்து, அரசருடைய செல்வத்திலே வளர்ந்து, திருமணம் செய்யப்படுகின்ற நாளிலே இறையவனுடைய அருளால் அத்திருமணம் தடைபட்டுப் போக, ஊர் ஊராகச் சென்று இறைவனை வணங்கி வருகின்றார் நம்பியாரூரர். அப்பொழுது 'மேற்கொண்ட திருமணக் கோலத்தோடேயே எப்பொழுதும் இருப்பாயாக!’ என்று இறைவனால் கட்டளையிடப்பட்டு