பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
11. நன்றி நினைத்தல்

ந்தப் பெரிய உலகில் என்று மனிதன் வாழத் தொடங்கினானோ, அன்றிலிருந்தே பிறருடைய உதவியை நாடித்தான் வாழ்ந்து வருகிறான். எவ்வளவு உயர்ந்த, நிலையில் உள்ளவனும் வசதியுடன் வாழ்பவனுங்கூட பிறருடைய உதவி இன்றி வாழ முடியாது. காலையில் எழுந்தவுடன் பல் தேய்ப்பது, குளிப்ப்து, காலை உணவு உண்பது முதல் இரவு படுக்கச் செல்லும் முன் குடிக்கின்ற இனிய பால் வரை அனைத்தும் பிறருடைய உதவியின்றிக் கிடைப்பது இல்லை.

மனைவி உணவு சமைத்துப் போடுதலும், வேலையாள் நமக்கு உரிய தொண்டுகளைச் செய்தலும் கடமையின்பாற். படும். அப்படியிருக்க, இக்காரியங்களைச் செய்வதற்காக நாம் ஏன் அவர்களிடம் நன்றி பாராட்ட வேண்டும் என்று நினைக்கலாம். உண்மையைக் கூறுமிடத்து, கடமையைச் செய்கின்றவர்கள் எந்த மன நிலையில் செய்கின்றார்கள் என்பது பற்றிக் கவலையில்லை. ஆனால் அந்தக் கடமையின் பயனைப் பெற்றுக்கொண்டு அனுபவிப்பவர்கள் மன நிலையைப் பற்றித்தான் இங்குக் குறிப்பிடுகின்றோம். கணவனுக்குச் சமைத்துப் போடுவது மனைவியின் கடமை. தான் என்றாலும், கடமை என்று மட்டும் நினைத்துக் கொண்டு அவள் சமைப்பது இல்லை! அப்படிச் சமைத்துப் போடுவதாக இருந்தால், மனைவி படைக்கின்ற உணவுக்