பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



12. அறிவின் பயன்


திருவாரூரைத் தலைநகராகக் கொண்டு சோழ மண்டலத்தை மனுநீதிச் சோழன் ஆட்சி செய்து வந்தான். சிறந்த கல்வி அறிவும், கேள்வி ஞானமும் உடைய அப்பெருமகன், நல்ல உலக அனுபவமும் பெற்றிருந்தான். ஒர் அரசன் எவ்வளவு நல்லவனாய் இருப்பினும், குடிகளின் குறைகளை அறிந்து உடனுக்கு உடன் போக்க வேண்டும் என்று நினைப்பினும், அதனால் பயன் ஒன்றும் விளையாது! ஏன் தெரியுமா? பெரிய மனிதர்களைப் பார்க்கச் சென்ற அனுபவம் உங்களுக்கு உண்டா? இல்லையானால், இதனைப் புரிந்து கொள்வது கடினம். நீங்கள் எப்படிப்பட்டவர்களாய் இருந்தாலும், காரிலே சென்று அந்தப் பெரிய மனிதர்கள் வீட்டு வாயிலில் இறங்குவதனால், அதிகத் தொல்லை இல்லாமல் அவர்களைப் பார்த்து விடலாம். வசதிக் குறைவு உடையவர் களாய் நீங்கள் இருந்து, நடந்து சென்று பெரிய மனிதர்களைப் பார்க்கப் போனால் கிடைக்கின்ற அனுபவங்கள் பல. முதலாவது, வெகு தூரம் நடந்து சென்ற உங்களைஅதுவும் பெரிய மனிதர்களைப் பார்க்கப் போகிறோம் என்ற ஆர்வத்துடன் சென்ற உங்களை- அவர்கள் வீட்டு வாயிலில் தொங்கும் ஒரு பல ைக முதலாவதாக வரவேற்கும். அந்தப் பலகையில் என்ன குளிர்ந்த வரவேற்பு இருக்கும் என்று நினைக்கின்றீர்கள்? “நாய்கள் ஜாக்கிரதை!" என்ற சொற்றொடரைவிட வேறு என்ன