பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
13. வாழ்க்கைக்கு ஒரு பற்று

ந்த உலகத்தின் படைப்புக்களிலேயே மிக விந்தை யான படைப்பு மனிதப் படைப்புத்தான். எல்லோரையும் விட, எல்லாவற்றையும்விடத் தான் உயர்ந்தவன் என்று. மனிதன் சொல்லிக் கொள்கிறான், ஏன் தெரியுமா? மனிதனுக்கு மட்டுமே மனம் என்ற ஒன்றும், சிந்தனை என்ற ஒன்றும் இறைவனால் கொடுக்கப்பட்டுள்ளன. மனம், சிந்தனை என்ற இரண்டாலும் தான் உயர்ந்து விட்டதாகக் கருதிக்கொள்கின்ற மனிதன், இவைகளின் பயன் என்ன என்பதைச் சிந்திப்பதே இல்லை!

மனிதனுடைய ஆட்சிக்கு உட்பட்டு இருக்க வேண்டிய மனம், பல சமயங்களில் பெரும்பாலானவர்களைப் பொறுத்த மட்டில், தானே ஆட்சி செய்யத் தொடங்கிவிடுகிறது. "மனம் போன போக்கெல்லாம் போக வேண்டா," என்ற பழஞ்சொல், ஏட்டுப் பேச்சாகவே இருந்துவிடு கிறது. மனிதனை மனம் செலுத்துகின்ற வரையில் அவன் மனிதன் என்ற பெயருக்குத் தகுதியுடையவன் ஆக மாட்டான். ஏனென்றால், மனிதன் என்ற சொல்லும் மனம் என்ற சொல்லும் ஒரளவு ஒற்றுமையுடையன. மனத்தை உடையவன் மனிதன் என்று கூடச் சொல்லி விடலாம். அவன் மனத்தை உடையவனாய் இருக்கும் பொழுதுதான் அவனுக்கு மனிதன் என்ற பெயர் தகுமே. தவிர, மனம் அவனை அடிமையாகக் கொண்டிருக்கும்