பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/85

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குறள் கண்ட வாழ்வு O 79


“பற்றுக்களையெல்லாம் கடந்து நிற்கும் இறைவ ஆணுடைய திருவடியைப் பற்றினால் ஒழிய உலகத்தின்மேல் கொண்ட மனப்பற்று விடாது,’ என்ற பொருளிலும், வேண்டும், வேண்டா என்ற தன்மைகளே இல்லாத கடவுளின் திருவடியைச் சார்ந்து, விருப்பு வெறுப்பு அற்ற பெரியவர்கட்குத் துன்பம் என்பது எங்கும் இல்லை,” என்ற பொருளிலும் மலர்ந்தன. இரு குறள் வெண்பாக்கள்:

பற்றுக பற்று அற்றான் பற்றினை; அப் பற்றைப்
பற்றுக பற்று விடற்கு"
வேண்டுதல் வேண்டாமை இலான் அடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல."

குறள் காட்டும் வாழ்க்கையை அப்படியே வாழ்ந்து காட்டிச் சென்றார் அபிராமி பட்டர்.