பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

குறள் கண்ட வாழ்வு O 83


உலகியலுக்கு முற்றிலும் புறம்பான ஒரு காரியத்தைச் செய்தமையாலேதான் அவர் பெயரைக் கூட மறந்துவிட்டு நம் முன்னோர்கள் (உலக) 'இயல்பகையார்’ என்று அவரை வழங்கினார்கள். காவிரிப்பூம்பட்டினத்தில் வாழ்ந்தார் அப்பெரியவர்; வாழ்க்கையில் ஒரு சிறந்த குறிக்கோளை மேற் கொண்டிருந்தார். சிவனடியார் யார் வந்து எதனைக் கேட்டாலும், இல்லை என்று கூறாமல் தர வேண்டும் என்பதே அவருடைய கொள்கையாகும். இத்தகைய ஒரு கொள்கையைப் பற்றி நாம் ஒன்றும் சொல்வதற்கில்லை. என்றாலும், கொள்கை ஒன்றை வாழ்வில் மேற்கொள்பவர் அனைவருக்கும் ஏற்படும் சோதனை அவருக்கும் ஏற்பட்டது. ஒரு நாள் கிழ அடியார் ஒருவர் இயற்பகையின் வீட்டிற்கு வந்து சேர்ந்தார். வந்தவரை இயற்பகை வரவேற்று உபசரித்த பின்னர், அவர் வந்த காரியத்தை விசாரித்தார். வந்த கிழவர், "அடியார்கள் எதனை விரும்பி வந்தாலும் அதனை மகிழ்ச்சியோடு நீர் தருகின்றீர் எனக் கேட்டு உம்பால் ஒரு பொருளை விரும்பி வந்தேன். அதனைத் தர இயலு மானால் சொல்கிறேன்," என்றார். ஒருவரிடம் ஒரு பொருளை நாடி வருபவர் இவ்வாறு கேட்பது முற்றிலும் புதுமையான முறைதான்.

வந்த கிழவர் இவ்வாறு கேட்டவுடன் இயற்பகையார், "யாது ஒன்றும் என்பக்கல் உண்டாகில், அன்னது எம்பிரான் அடியவர் உடைமை! ஐயமில்லை! நீர் அருள் செய்யும்," என்று கூறினார். வந்த கிழவர், "மன்னு காதல் உம் மனைவியை வேண்டி வந்தது இங்கு,” என அந்தணர் எதிரே சொன்ன போதிலும், 'முன்னையின் மகிழ்ந்தாராம்' இயற்பகை.

அவ்வாறே உள்ளே சென்ற இயற்பகை, மனைவியை நோக்கி, 'இந்த அடியாருக்கு உன்னைத் தந்துவிட்டேன்!’ என்றார். அம்மாதரசி முதலில் கலங்கிப் பின் தெளிந்து,