பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறள் கண்ட வாழ்வு O 87


கண்ணாய் இருந்து விடுகிறார். தம் குறிக்கோள் இவ்வளவு முயற்சி எடுத்துக் கொள்வதற்குத் தகுதியுடையதுதானா என்பதைப்பற்றி அவர் கவலைப்படுவதில்லை, ஆனால், உயர்ந்த குறிக்கோள் கொண்டு வாழ்ந்த பெரியவர் களுக்கும், இவர்கட்கும் ஒரு விதத்தில் ஒற்றுமையுண்டு. அப்பெரியவர்களும் தங்கள் குறிக்கோள் நிறைவேறுகின்ற வரையில் எது பற்றியும் கவலைப்படுவதில்லை. இவர் களும் அப்படியே! என்றாலும், என்ன வேற்றுமை: “மலையைக் கல்லி எலியைப் பிடித்தான், என்பது நம் நாட்டுப் பழமொழி. ફેંફ

பெரு முயற்சி செய்தால் அதனால் பெறுகின்ற பயனும் பெரிதாக இருத்தல் வேண்டும். அவ்வாறில்லையானால், அம்முயற்சியால் பயன் ஒன்றுமில்லை. இது ஒருபுற மிருக்க, மட்டமான பொருளை அடைய வேண்டுமென்று குறிக்கோள் வகுத்துக் கொள்வதில் மற்றோர் இடைஞ் சலும் இருக்கிறது. ஒரு குறிக்கோளை அடைய முயலும் முயற்சியிலேதான் இன்பம் இருக்கிறதே தவிர, அதை அடைந்து விட்ட பிறகு எவ்வித இன்பமும் இருப்ப தில்லை. ‘அரிது பெற்றிடினும் பெற்றதில் விருப்பம் அறப் பெறாதன விரும்பும் உயிர்கள்,’ என்று கூறினார் சாந்தலிங்க அடிகள். எவ்வளவு பெரு முயற்சி செய்து ஒரு பொருளைப் பெற்றாலும், அதன் மேல் பற்று நீங்கி விட, பெறாத பொருளையே நாடுவது மனித இயல்பு. எனவே, சாதாரணப் பொருளை அடைய வேண்டும் என்பதையே வாழ்வின் குறிக்கோளாக வகுத்துக் கொண் டால் அக்குறிக்கோள் முடிந்தவுடன் வாழ்விலும் அலுப்புத் தட்டிவிடும்.

மேனாடுகளில் பெரும் பொருளாளர்கள், வாழ்வில் வெறுப்படைந்தேன்!’ என்று சொல்லிவிட்டுத் தற்கொலை செய்து கொள்வதைக் கேட்கிறோம். வாழ்வில் விரும்பக் கூடிய எல்லா வசதிகளையும் பெற்றுள்ள இவர்கள் ஏன் இவ்வாறு செய்ய வேண்டும்? காரணம் வேறொன்று