பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/95

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறள் கண்ட வாழ்வு O 89


புலி போன்ற உயர்ந்த குறிக்கோள் உடையவர்கள் நட்பே வேண்டும், என்று பாடுகிறான் புறநானூற்றுப் பாடல் ஒன்றிலே.

குறிக்கோள் உயர்ந்ததாக இருக்க வேண்டுமென்றால், எவ்வளவு உயர்ந்ததாக இருக்க வேண்டுமென்ற கேள்வி பிறக்குமல்லவா? இதற்கு விடை கூற வந்த வள்ளுவர், அது மிக மிக உயர்வானதாக இருக்க வேண்டுமென்று கூறினார். அப்படியானால், அடைய முடியாத குறிக் கோளாகக்கூட இருக்கலாமா?’ என்றால், அதுவே மிக உயர்ந்ததாகும் என்றும் கூறுகிறார். குறிக்கோள் இல்லாத வாழ்க்கை பயனற்றதாகி விடும். ஆதலால், மனித வாழ்க்கையில் இன்றியமையாது வேண்டப்படும் இது மிக மிக உயர்ந்ததாக இருப்பது நலம் பயக்கும்.

பெருஞ்சித்திரன் என்ற புலவன் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்தவன். உண்மையான புலவனுக்கு உரிய சிறந்த இலக்கணமாகிய வறுமை அவன் கூடவே பிறந்திருந்தது. குமணனை நோக்கி அவன் பாடுகின்ற பாடலில், ‘ஐயா, சமைக்கின்ற பாத்திரம் பல காலமாக அடுப்பில் ஏறாததால் எங்கள் வீட்டு அடுப்பின் மேலுள்ள குமிழ் தேயவே இல்லை. பாலில்லாத மார்பைச் சுவைத்து அழுகின்ற என் குழந்தையைப் பார்த்துக் கண்ணிர் விடுவதைத் தவிர என் மனைவி வேறொன்றும் செய்ய இயலாது இருக்கிறாள்,’ என்ற கருத்தில் பாடு கின்ற அளவுக்கு வறுமையின் எல்லைக்கோட்டில் நின்றவன் பெருஞ்சித்திரன்,

இவ்வளவு வறுமையுடைய இப்புலவன் வெளிமான் என்ற சிற்றரசனை ஒரு முறை கண்டு பரிசில் பெறச் சென்றான். இவன் சென்ற நேரத்தில் அச்சிற்றரசன் உறங்கிக் கொண்டிருந்தான். தூக்கத்தைக் கலைத்துக் கொண்டு எழுந்து வர விரும்பாத அவன், தன் தம்பியை நோக்கி, புலவனுக்குப் பரிசில் ஏதேனும் கொடுத்து அனுப்பிவிடுக!’ என்று கூறினான். அத்தம்பி புலவன்