பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/98

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறள் கண்ட வாழ்வு O 93

நிரம்ப மிட்டாய் இருப்பினுங்கூடக் கொடுப்பது’ என்பது ஒரு சிலருக்கே உரியது. அதிலும் ஒரே ஒரு. மிட்டாய், அதுவும் தின்றுகொண்டிருக்கும் நிலையில் உள்ள ஒரு மிட்டாயைக் கொடுக்க வேண்டுமானால் அது அனைவரும் செய்யக்கூடிய ஒரு செயலன்று. இதனை ஒரு தனிப்பட்ட மனநிலை என்றே கூற வேண்டும். விளையும் பயிர் முளையிலே’ என்பது இந்த நாட்டின் பழமொழி. பிற்காலத்தில் எதனையும் வழங்கக்கூடிய இயல்புடையவர் களாக இருப்பவர்கள் இளமைக் காலத்திலும் இதே மன. நிலையைப் பெற்றிருப்பார்கள்.

இவ்வாறு கூற மற்றொரு காரணமும் உண்டு. கொடுக்கும் இயல்பு என்பது பிறப்பிலேயே அமைய வேண்டுமே தவிர, பழகிக்கொண்டால் வரக்கூடிய ஒன்றன்று. ஆதலாலேதான், தான் தின்றுகொண்டிருக்கும். மிட்டாயைப் பகிர்ந்து அளிக்கும் குழந்தையைப் போற்று. கின்றோம்.

அன்பு என்ற மூன்று எழுத்துக்களால் ஆன ஒரு சொல் உலகத்தையே ஆட்டிப் படைக்கின்றது என்று கூறினாலும் தவறு இல்லை. தான் தின்றுகொண்டிருக்கும் மிட்டாயைப் பகிர்ந்து கொடுக்கும் குழந்தை இந்த மூன்றெழுத்துப் பொருளை மிகுதியாகக் கொண்டுள்ளது. அன்பென்பது இயல்பாகவே பிறப்பில் வர வேண்டிய, ஒன்று.

அன்பு என்பது யாது? அது ஒருவகை மன உணர்ச்சியே ஆகும். தன்னை அல்லாத பிற உயிர்களிடம் ஏற்படும் பரிவு, கருணை என்பனவற்றையே அன்பு என்று, கூறுகின்றோம். ஏனைய உணர்ச்சிகளைத் தாங்கியுள்ள மனத்தில், அன்பு உணர்ச்சி நிரம்பும் பொழுதுதான் மனிதன் மகாத்துமா ஆகிறான். உலகிடைப் பிறக்கும். எந்த உயிரும் வளர வேண்டுமானால், அன்பு என்று. ஒன்று தேவைப்படும்.