பக்கம்:குறள் கண்ட வாழ்வு.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

94 O அ. ச. ஞானசம்பந்தன்

தாய் குழந்தையிடம் காட்டுவதும், விலங்குகள் தம் குட்டிகளிடம் காட்டுவதும் ஆகிய இவ்வன்பாலேதான் உலகம் வாழ்கிறது என்று கூறினால் இதில் வியப்பு ஒன்றுமே இல்லை. ஏனைய பண்புகள் எத்துணை நிரம்பி இருப்பினும் ஒருவன் மனிதன் என்று வழங்கப்பட வேண்டுமானால், ‘அன்பு உடையவனாக இருத்தல் வேண்டும். விலங்கு, மனிதன், தெய்வம் என்ற மூன்று நிலையில் உள்ளவர்களையும் இணைப்பது இது ஒன்று தான்.

மனிதன் தன்னைப் போன்ற உயிர்களிடத்தும் இறைவனிடத்தும் காட்ட வேண்டிய இந்த அன்பு வெளிப்படும்பொழுது எவ்வாறு இதனை அறிந்து கொள்வது? உள்ளத்துள் தோன்றும் அன்பை அடைக்க முடியாது என்றும், அதனைப் பிறர் எளிதாக அறிந்து கொள்ள முடியும் என்றும் குறள் கூறுகின்றது. அன்புடையார் கண்களே மிகச் சிறந்த அறிவிக்கும் கருவி களாகும். உள்ளத்தின் உள்ளே இருக்கும் அன்பை வெளிக் காட்டக் கண்ணிர் பயன்படுகின்றதாம். எல்லையற்ற அன்பைப் பல சொற்களால் கூறுவதைக்காட்டிலும் இரண்டு சொட்டுக் கண்ணிரின் மூலம் நன்கு சொல்வி விடலாம். இறைவன் கூட இந்தக் கண்ணிருக்கு ஆசைப்படு கிறான் என்று பழைய பாடல் ஒன்று கூறுகின்றது.

‘அளவு மிகுந்த புண்ணிய நதிகளிலிருந்து கொண்டு வரப்படும் தண்ணிர், ஏழு கடல்களிலிருந்து வரும் தீர்த்தம் ஆகியவற்றில் மூழ்குவதைக் காட்டிலும், அன்பர்களுடைய கண்ணிலிருந்து வரும் கண்ணிரிலேயே நீராட விரும்பு கிறாளாம் அம்பிகை’ என்ற கருத்தைப் பாசவதைப் பரணி” என்ற நூல், ‘என் பாவம் ஆறு கடல் ஏழியிருந்து என் அம்மை அன்பாளர் கண்ணருவி ஆடுவது திருவுள்ளம்’ என்று பாடிச் செல்கிறது.

இவ்வளவு மானிட உயிர்களுக்கும் பெருந்தேவையாக உள்ள அன்பு ஒரு சிலரிடம் மிகுதியாக இருந்து அவர்