பக்கம்:குறள் நானூறு.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செயல்களில் அருமையானது நட்பு, நட்புக் கொள்ளல் போன்ற அருமை உலகில் வேறு எவையும் இல்லை, அந்த நட்பைப்போன்று எடுத்துக்கொள்ளும் வினைக்கு அருமையான பாதுகாப்பு உலகில் வேறு எவையும் இல்லை. எனவே, நட்பு அருமையானது. 256

நல்ல நூலைப் படிக்கப் படிக்கப் புதிது புதிதான சுவை தோன்றும். அதுபோன்று, நல்ல பண்புடைய நண்பர்ோடு பழகப் பழகப் புதிது புதிதான மகிழ்ச்சி தோன்றும். 257

நண்பராகக் கூடுவதற்கு முன் தொடர்பும், பழக்க மும் வேண்டுவதில்லை. உள்ளம் ஒத்த உணர்ச்சிதான் நட்பை உண்டாக்கும். உரிமையைத் தரும். 25g

இடுப்பில் கட்டிய உடை அவிழ்ந்தால் கை இயல் பாய் விரைந்து சென்று பற்றிக் காக்கும். அது போன்று, நண்பனுக்கு ஓர் இடையூறு நேர்ந்தால் உணர்வோடு விரைந்து அதனைப் போக்குவதே நட் பாகும். &岳葛冯

நட்பினுக்குச் செம்மாப்பான மேம்பட்ட நிலை ஒன்று உண்டு. அது யாது? யாதெனில் 'அவன்’ "தான்' என்ற வேறுபாடு இன்றி, வாய்ப்பு நேரும் போதெல்லாம் அவனுக்கு உதவியாய்க் கைகொடுக்கும் நிலையாகும். 360

106

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/118&oldid=555615" இலிருந்து மீள்விக்கப்பட்டது