பக்கம்:குறள் நானூறு.pdf/126

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பேதைமை என்று சொல்லப்படுவது - யாது? யாதெனில் தனக்குத் தீங்கை உண்டாக்கிக்கொண்டு நன்மைதரும் வருவாயை இழந்துவிடுவதாகும். 27 6

நாள்தோறும் நல்ல நூல்களைக் கற்று உணர்வர்: உணர்ந்தவற்றைப் பிறர்க்கெல்லாம் எடுத்து விளக்கி உரைப்பர். கற்று உணர்ந்தபடி தாம் ஒழுகி அடங்கார். அவர் போன்ற பேதையர் உலகில் வேறு எவரும் இலர். 277

பேதை ஒழுக்கத்தை அறியாதவன். அவன் ஒரு செயலை மேற்கொண்டால் அது நிறைவேருமல் பொய் யாகும், பொய்யாவது மட்டும் அன்று. குற்றத்தை விளைத்தவளுய் அச்செயல் மூலம் விலங்கு பூட்டப் படுவான். 278

நன்மை தீமைகளே அறியும் அறிவு இல்லாதவன், பிறர்க்கு மனமுவந்து ஒரு பொருளையும் ஈய மாட்டான். வாளுகில், அதற்குக் காரணம் அறிவைக் கையாண்டு செய்த நல்ல தன்மை என்று ஒன்றும் இல்லை. பெறுபவன் செய்த தவம் என்னுதான் சொல்லவேண்டும். 2? ஒ

நன்மையை அறியாத பேதையர் இதைச் செய் என்று ஏவினுலும் நன்மையைச் செய்துகொள்ள மாட்டார். தாமாகவும் நன்மையைத் தெளிவாக உணரமாட்டார். அதுதான் புல்லறிவாண்மை. அஃது ஒரு நோய். அஃது உயிர்போகும் வரை அவருக்கு ஒரு தொழுநோய். 28 to

11 4

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/126&oldid=555623" இலிருந்து மீள்விக்கப்பட்டது