பக்கம்:குறள் நானூறு.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காதல் நோய் காலேயில் அரும்பும். பகற்பொழு தெல்லாம் போதாகி மலரும் பக்குவத்திற்கு வளரும். மாலையில் மலரும். எனவே, காதல் ஒரு நோய் மலர், .87፤

என் காதலர் என்னேவிட்டுப் பிரிந்த போதே என் உயிர் மறைந்திருக்கும். அவர் பொருளிட்டும் கடமை யாற்றப் பிரிந்திருக்கிருர், இக்காரணத்தால் உயிரைப் போகவிடாமல் பிடித்திருக்கின்றேன், மயக்கத்தைத் தரும். இக்கொடிய மாலைப்பொழுது என் பிடியிலி ருந்து உயிரை மாய வைக்கிறது. 373

என் காதலருடன் யான் கூடிக் களித்த நாளில் என் தோள்கள் பூரித்தன, இப்போது மெலிந்து கும்பிய என் தோளகள் அவர் பிரிவை அறிவிக்கும் அறிகுறியாய் உள்ளன போலும். J73

அவளை இறுகத் தழுவினேன். எப்படியோ தென் றற் காற்று இடையே நுழைந்தது. அந்த இடை வெளிக்கே அப்பேதைப் பெண் கலங்களுள். கலங்கிப் பெரும் மழைத்துளி போன்று கண்ணிர் வடித்த கண்கள் பஞ்சடைந்தது போன்று அழகிழந்தன. 374

என்னைவிட்டுக் காதலரைத் தேடி ஒடும் என் நெஞ்சே! உன்னுடன் என் இரு கண்களைகளையும் கூட் டிக்கொண்டு போய்விடு. விட்டுச் செல்வாயானுல் அவைகள் அவரைக் காணும் துடிப்பில் என்னேயே தின்றுவிடும். 375

254

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/166&oldid=555663" இலிருந்து மீள்விக்கப்பட்டது