பக்கம்:குறள் நானூறு.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குடும்பத்தில் இயல்பாக அமைபவர் பெற்ருேர், மனைவி, மக்கள், ஆகிய மூவர்ஆவர். இல்லறத்தில் வாழ்பவன் அம்மூவர்க்கும் நல்ல நெறியில் துணை நிற்பவன். 16

இல்லறத்தில் வாழ்பவன் அவாக்களை விட்ட பொது நலத்தார்க்கும், ஏழையர்க்கும் துணையின்றி இறந்தவர்க்கும் துணைநிற்பவன். 17

தென்னட்டுப் பொதுமக்கள், வாழ்வாங்கு வாழும் தெய்வம், விருந்தினர், சுற்றத்தார், தான் என்று ஐந்து முனைகளில் இ ல் ல ற க் க ட ைம ஆற்றல் சிறந்தது. I 8

வாழ்க்கையில் அன்பு உணர்வைக் கொள்ளுதலே இல்லறப் பண்பு. அறச்செயலைச் செய்தலே இல்லறப் பயன். - 19

உலகத்தில் வாழும் வகையறிந்து நிறைவான வாழ்வு வாழ்பவன் மாந்தத் தெய்வம்/அவன், மேல் நிலையில் உறையும் தெய்வமt க வைத்து வணங்கப் படுவான். 20

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/20&oldid=555517" இலிருந்து மீள்விக்கப்பட்டது