பக்கம்:குறள் நானூறு.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கட்டமிட்டு அரங்கு அமைக்காமல் தாய ஆட்டம் ஆட முடியாது. அதுபோன்று கருத்து நிறைந்த நூல் கண்க் கற்காமல் அறிஞர் கூட்டத்தில் கலந்து உரை பாட முடியitது. $41

கொங்கை இரண்டு தோன்றிப் பருவம் அடையாத பெண் பெண்ணுக்கு இயல்பான காதல் இன்பத்தை அடைய முடியாது. அதுபோன்றே, கல்வியையும், நூலறிவையும் அடையாதவன் கற்றவர் குழுவில் சொல் லாடும் மகிழ்ச்சியைப் பெற முடியாது. 142

தல்லாத ஒருவனுக்கு ஒரு தகுதியும் இல்ல. இருப்ப தாகக் கருதப்பட்டால் அவன் கற்றவர் குழுவில் நின்று பேசும்போது ஏற்படும் சொற்சோர்வு இவன் தகுதியின் மையைக் காட்டிவிடும். #43

கல்வியை நுணுக்கமாக, மாட்சியையுடன் ஆரா யும் அறிவுநலத்தைப் பெறவேண்டும். பெருமல் உடல் அழகு நலம் பெற்றிருப்பது பெருமையன்று. உடல் அழகு நலம் மட்டும் பெற்றவன் மண்ணுல் அழகு மிளிரச் செய் யப்பட்ட பெண் பொம்மையைப் போன்றவன் ஆவான். # 44

வாழ்வை விளங்கவைக்கும் நூல்களேக் கற்றவரே மக்கள் இனத்தவர். கற்காத மற்றவர் விலங்கு இனத்த வர் மக்கள் வாழ்வுக்கும் விலங்கு வாழ்வுக்கும் உள்ள வேறுபாடு போன்றதே இ ல ர் க ள் வேறுபாடும் ஆகும். $45

60

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/72&oldid=555569" இலிருந்து மீள்விக்கப்பட்டது