பக்கம்:குறள் நானூறு.pdf/74

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

செவிக்கு உணவாகிய கேள்வி அறிவு கிடைக்காத போது தாழ்ந்த வயிற்றுக்குச் சிறிதளவு வழங்கப்பட வேண்டும் கேள்வியறிவை மிகுதியாகவும், உணவைக் குறைவாகவும் கொள்ளவேண்டும். 145

அறிஞர் கூறும் அறிவுரையாம் கேள்வியை துணுக்க மாகக் கேட்டு உணர வேண்டும். உணர்ந்து மறவாமல் தொகுத்துக் கொள்ளவேண்டும். இத்தகைய கேள்வி யறிவைப் பெற்றவர் உணர்ச்சி தவறிய நேரத்தும் அறி வற்றவற்றைச் சொல்லார். 147

அறிவு, உணர்ச்சி செல்லும் இடத்தில் உள்ளத் தைச் செல்ல விடாமல் தடுப்பது; தீய உணர்விலிருந்து நீக்குவது; நல்ல செயல்களில் செலுத்துவதாகும். 148

தான் பிறர்க்குச் சொல்லுங்கால் எளிதிற் புரியும் பொருளாக உள்ளத்தில் சென்று பதியுமாறு சொல்வி, பிறர் வாய்ச்சொற்களில் நுண்ணிய கிபாருள்களைக் காண் பதே அறிவுடைமையாகும். 149

எதிர்கால நடப்புகளே எண்ணி அறிந்து அவற்றிற் கேற்பத் தன் செயல்களே வகுத்துக் காத்துக்கொள்பவர் சிறந்த அறிவுடையவர். அவர்க்கு அதிர்ச்சியால் வரும் ஒரு நோயும் இல்லை. } 50

62

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/74&oldid=555571" இலிருந்து மீள்விக்கப்பட்டது