பக்கம்:குறள் நானூறு.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அதிகாரக் கோலை ஏந்தி மக்களால் செலுத்த இய லாத வரியைக் கடுமையாக வாங்கல் கூடாது. அது காட்டு வழியில் வேலோடு நிற்கும் வழிப்பறிக்காரன் 'இருப்பதை எடுத்து இடு' என்று கொள்ளேயடிப்பதைப் போன்றதாம். 18|

ஆட்சித் தலைவன் நேர்மையான ஆட்சிமுறை தவறிக் கடுமையான ஆட்சி நடத்தக்கூடாது. நடத் தினல் பழி உண்டாகும். பருவ மழை பொருத்தமா கப் பெய்யாத இயற்கைக் குறையும் அவன் குறை யாய்ப் பழியாகிவிடும். 星母路

நீண்ட காலம் தன் செல்வமும் புகழும் தன்னே விட்டு நீங்காதிருக்க விரும்பும் ஆட்சித் தலைவன் மக்கள் நடுங்கி அஞ்சத்தக்க செயலைச் செய்யக்கூடாது. குற்றங்களுக்காக ஒறுக்க நேரும்போதும் கடுமைபோல் தொடங்கி எளிய அளவாய் ஒறுப்பாளுக! 183

ஆட்சித் தலைவனது வெற்றியைத் தேய்த்துக் குறைக்கும் அரம் இரண்டு. அவை கடுமையான சொல்லும், அளவு மீறிய ஒறுத்தலும் ஆகும். எனவே, இவற்றை விட வேண்டும். 夏8á

அரச பதவிக்கு, இனத்தார் அமைச்சரும் கரும காரர் முதலியோரும் ஆவர். ஆட்சித் தலைவன் அவர்களே எதற்கும் கலந்து ஆராயவேண்டும். கலக் காதவன் ஆட்சி தடைபடும். தடையால் சினங் கொண்டு சீறுவான், சீறி அஞ்சத்தக்க செய்வான். செய்வதால் செல்வமும் பெருமையும் சுருங்கும். 185

76

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறள்_நானூறு.pdf/88&oldid=555585" இலிருந்து மீள்விக்கப்பட்டது