பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிக் குமரி ↔ 103

அயம்இழி அருவிய அணிமலை நன்னாட! ஏறுஇரங்கு இருளிடை இரவினில் பதம்பெறாஅன் 10 மாறினென் எனக்கூறி மனங்கொள்ளும் தான்் என்ப; கூடுதல் வேட்கையால் குறிபார்த்துக் குரல் நொச்சிப் பாடு ஒர்க்கும் செவியொடு பைதலேன் யானாக;

அருஞ்செலவு ஆரிடை அருளிவந்து அளிபெறாஅன் வருந்தினென் எனப்பல வாய்விடுஉம் தான்்என்ப; 15 நிலைஉயர் கடவுட்குக் கடம்பூண்டு தன்மாட்டுப் பலகுழும் மனத்தோடு பைதலேன் யானாக;

கனைபெயல் நடுநாள் யான்கண்மாறக் குறிபெறாஅன் புனையிழாய் ! என்பழி நினக்கு உரைக்கும் தான்்என்ப துளிநசை வேட்கையால் மிசையாடும் புள்ளில்தன் 20 அளிநசைஇ யார்வுற்ற அன்பினேன் யானாக;

எனவாங்கு, கலந்தநோய் அகம்மிகக் கண்படா என்வயின், புலந்தாயும் நீஆயின் பொய்யானே வெல்குவை;

இலங்குதாழ் அருவியோடு அணிகொண்ட நின்மலைச் 25 சிலம்பு போல் கூறுவ கூறும் இலங்கு ஏர் எல்வளை இவளுடை நோயே.”

அல்ல குறிப்பட்டுத் தலைவன் மீள, அதனை என் பிழையாகக் கருதுவன்’ எனக்கவன்று ஆற்றாளாகிய தலைவியது நிலைமை, தோழி, தலைவர்க்குக் கூறி, இது, நின்தோழியால் ஆயிற்று! என, எனது பிழைப்பாக்கி, அவளை ஆற்றுவிப்பாய் எனக்கூறி, வரைவு கடாயது எனும் துறையமைய வந்துளது இது.