பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14

மறவற்க இவளை

வரையாது வழங்கும் வள்ளல்கள் வழிவந்த ஓர் இளைஞன், வாழையின் கீழ்க் கன்றும் கனியுதவுவது போல், பொருள் வேண்டித் தன்பால் வந்து நிற்கும் புலவர்க்குக் காற்றினும் கடுகச் செல்லும் தேர்களையும் களிறுகளையும், செல்வத்தையும் தன் இரு கைகளாலும் ஓய்வறியாவாறு வழங்குவன். பயன் கருதாப் பெருங் கொடையாளனாகிய அவனை, மழையினும் மாண்புடை யவன் என மக்கள் பாராட்டுவர். இவ்வாறு, அருள் சிறந்த அவன் கைகள், ஆண்மையிலும் சிறந்தனவாம். அவன் வலக்கை, வருவார்க்கு வாரி வாரி வழங்கும் எனின், இடக்கை, பெரும் படையையும் நடுங்கப் பண்ணும் பாம்பின் படம் பொறித்ததும், பகைவர்க்கு அச்சம் ஊட்டு வதுமாய பெரிய வில்லைப் பற்றிக் கிடக்கும்.

அருளும், ஆண்மையும் ஒருங்கே வாய்ந்த உரவோ னாய அவ்விளைஞன், ஒருநாள், வேட்டைமேற் சென்றிருந்