பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

142 புலவர் கா. கோவிந்தன்

தங்கள் புனத்திற் புகுந்த யானையெனப் பிறழ உணர்ந்து, அதை விரட்டுதற்கு வேண்டும் ஒளி வீசும் பந்தமும், கவணும் கல்லும், வில்லும் அம்பும் கொணர்வான் விரைந்தனராதலின், அவர்கள் அவனை இன்னான் என அறிந்து கொண்டிலர். அதனால், அவன் அன்றும் தடையேதும் இன்றித் தன் காதலியைக் கண்டு மகிழ்ந்து சென்றான்.

பிறிதொரு நாள், அழகிய ஆரங்கள் மார்பிற் கிடந்து மின்ன, காதலியைக் காண வேண்டும் எனும் ஆர்வம் ஒருபால் உந்த, இவ்வாறு இரவில் வந்து செல்லும் தன்னைக் கண்டு கொண்டால், அவளுக்கு ஏதம் உண்டாமே என அவள்பாற் பிறந்த அருள் உள்ளம் ஒரு பால் ஈர்ப்ப, பிறர் கண்ணிற் படாவாறு, ஒளிந்து ஒளிந்து முன்னேறிச் சென்றான். செடி கொடிகளுக்கிடையே மறைந்து செல்லும் அவன், காலடியோசை கேட்டு விலங்குகள் மருண்டு ஒடும் ஒசையாலும், அவன் அவ் வாறு மறைந்து செல்லுங்கால், இடையிடையே, அவன் கழுத்திற் கிடக்கும் ஆரம் வீசும் ஒளி, புலியின் கண்ணொளிபோல் தோன்றியதாலும், தம்மூருள் புலி புகுந்து விட்டதோ என, அவ்வூர் வாழ் மக்கள் அஞ்சி அகன்றனர். அதனால், அவன் அன்றும் அவர்களால் அறியப் பெறாதே வந்து, அவளைக் கண்டு மகிழ்ந்து சென்றான். -

இவ்வாறு, அவன் வருகைக்குத் தடையொன்றும் நேர்ந்திலது. ஆயினும், அத்தடை நேராமைக்கு-அவ்வூரார் அவனை அறிந்து கொள்ளாமைக்கு-அவர்கள், அவனை அணங்கென்றும், களிறென்றும், புலியென்றும் பிறழ