பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18

அல்லல் அகற்றினான்

குன்றில்வாழ் குறவர் மகள் ஒருத்தி. கொடிப் பூப்போலவும், கோட்டுப் பூப்போலவும் பொன்னாற் செய்த பொற் பூமாலை மார்பில் கிடந்து மின்ன, வளை களும், அவ்வளைகள் ஒன்றோடொன்று நெருங்கி விளங்கு மாறு கட்டப்பெற்ற கட்டுவடமும், அணைபோல் பருத்த அவள் தோளின் அழகிய முன்கையிற் கிடந்து அணி செய்ய, மகர மீன் வாய்பொற் பொன்னாற் செய்த வனப்பு மிக்க தலையணியும், பல வடங்களாகக் கட்டப்பெற்ற பன்னிற மலர் மாலையும் கஸ்தூரி மணங்கமழும் அவள் கூந்தற்கண் கிடந்து பேரழகு செய்யத் தன் தினைப் புனத்தை அடுத்த ஓரிடத்தே, ஒருநாள் தனித்திருந்தாள். அப்போது வேட்டை மேற்கொண்டோ, அல்லது வேறு பணி மேற்கொண்டோ, ஆங்கு வந்த ஓர் இளைஞன், அவளை அந்நிலையிற் கண்டான். அவள் பேரழகால் கட்டுண்டு காதல் கொண்டான். காதல் கொண்டானா யினும், அவள் கருத்தறியாது அவளை அணுக