பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிக் குமரி இ. 183

திரிந்து, ஆங்காங்கு அவள் மேற்கொள்ளும் ஆடல் கண்டு அகம் மகிழ்ந்து வந்தான்்.

தம் வாழ்வில், தாம் விரும்பும் நல்ல கணவரைத் தாம் பெறுதற் பொருட்டும், தாம் வாழும் நாடு மழை பெற்று மகிழ்தல் வேண்டியும், பழந்தமிழ் மகளிர், சில நோன்புகளை மேற்கொண்டிருந்தனர். அம் மகளிரைப் போன்றே, இவ்விளம் பெண்ணும், தைத் திங்களின்போது வைகறையில் எழுந்து தன் தாயோடும், தன்னை ஒத்த ஆண்டினராய தன் ஊர்ப் பெண்களோடும், ஊரை அடுத்து ஒடும் ஆற்றிற்குச் சென்று, நீராடி, ஆற்று மணலில், அம்மணலாற் பாவை செய்து, தாய் முன்னின்று வழிகாட்ட வழிபட்டு வருவாள்.

துறந்து, தவநெறி மேற்கொண்ட முனிவர்கள் இறை வனைப் பரவும் இனிய பாக்களைப் பாடிக் கொண்டே மனைகள் தோறும் சென்று, ஐயம் ஏற்று உண்டு, எஞ்சியதைப் பிறர்க்கு ஈந்து வாழும் பெருவாழ்வை ஒருசில நாட்கள் தாமும் மேற்கொள்வதால், அம்முனி வரைப் போன்றே, தாம் கருதும் பயனாம் தக்க கணவரைப் பெறுதல் தமக்கும் வாய்க்கும் எனக் கருதும் அக்கால மகளிரைப் போன்றே, இவளும், தன் தோழியரோடும் கூடித் தவசிகள் வேடம் பூண்டு, பிறர் மனைதோறும் சென்று பாடி, ஐயம் ஏற்று, அதைத் தான்ும் உண்டு, தன் உடன் ஏகும் தோழியர்க்கும் ஈந்து, ஆடும் ஆடலை ஆடி மகிழ்வள். - - -

தமக்கு வாய்க்கும் கணவர் நல்லவராதல் வேண்டும் என விரும்பிய பழந்தமிழ் மகளிர், ஆணும், பெண்ணுமாய்