பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/203

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறிஞ்சிக் குமரி இ. 201

அவன் ஆண்மை. அதனால், அவன் நாவிலிருந்து சொல்லேதும் பிறந்திலது. ஆசை அவளைப் பணிந்து, குறைகூறி அவள் துணை வேண்டத் துணிய, பண்பு, பணிந்து பின்சென்று இரத்தல் இழிவு எனக் கூறித் தடுக்க, அவன் ஏதும் உரையானாயினான். ஆனால், அவன் ஆசையோ, அடங்கிற்றிலது. அதனால், அவன் அவள் முகத்தைப் பலமுறை நோக்குவன். அவள் தன்னை நோக்கியவிடத்து, நாணித் தலை குனிந்து கொள்வன். இவ்வாறே, உரைக்கத் துணிந்து, அவள் முகத்தை நோக்குவதும், அவள் நோக்கிய வழித் தலை குனிந்து கொள்வதுமாக, நெடிது நேரம் அங்ங்ணே நின்றிருந்தான்்.

அவன் நிலையைக் கண்டாள் தோழி. அவள் அகக் கண்ணிற்கு மற்றொரு காட்சி புலன்ாயிற்று. செல்வ வாழ்வில் சிறக்க வாழ்ந்த சான்றோர் ஒருவர், எக் காரணத்தாலோ, தம் செல்வமெல்லாம் அழிந்து போக, வறுமையுற்று வாடினார். அக்காலை, அவர் உறவினர் சிலர், சிறந்த செல்வமும், அச் செல்வத்தை அது இல்லார்க்கு ஈந்து துணைபுரியும் சீரிய சிந்தையும் உடைய ராய் வாழ்ந்திருந்தனர். அதை அறிந்த அச்சான்றோர், அவர்கள்பாற் சென்று, தம் வறுமை நிலை கூறி வாழ்வு பெற்று வர விரும்பினார். அவ்வாறே அவர்பால் சென்றார். ஆனால், தம் உள்ளம் தம் குறை கூறத் துணிந்த போழ்து, "கொள்ளுதல் தீது கொடுப்பது நன்றால்!" என உணர்ந்த தம் நல்லறிவு இடை புகுந்து தடுக்கக் கூற எண்ணியதைக் கூற மாட்டாதே வருந்தி நின்றார். இளைஞன் நிலை, அச்சான்றோர் நிலையையே நினைப் பூட்டிற்று. அவன் நிலையால், அவன் பெருந்தன்மை