பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/211

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26

மாறுண்டோ நெஞ்சே!

ஒர் இளைஞன் ஒரு பெண்ணின்மீது காதல் கொண்டான். அப்பெண்ணும் அவ்விளைஞனும் ஏனை யோரைப் போல் அல்லாது, சிறிது புதுமை வாய்ந்தவர்கள். நல்லது எனத் தன் உள்ளம் எண்ணிய ஒரு செயலைத் துணிந்து மேற்கொள்ளும் இயல்புடையான் அவ் விளைஞன். தன்னோடும், அச்செயலோடும் தொடர்புடை யார், தான்் அது செய்வதை ஏற்றுக் கொள்ளுகின்றனரா இல்லையா என்பதை எண்ணிப் பாரான். தனக்கு ஒரு பொருள் வேண்டும் என எண்ணி விட்டால் அப் பொருளை எவ்வாற்றானும் அடைந்துவிட எண்ணும் அவன் உள்ளம். அம்முறை தவறு எனத் தடை கூறுவாரை, ஏற்ற காரணங்களை எடுத்துக் காட்டித் தன் வயமாக்கும் தகுதியுடையான். இதனால், அவன் தகாதனவற்றையே செய்வான் என்பது பொருள் அன்று. ஒருவர் நல்லனவே செய்யினும், அவற்றை நல்லன என எல்லோரும் ஒப்புக்கொள்வது உலகியலன்றே. சிலர் அவன் செய்யும்

குறிஞ்சி-14