பக்கம்:குறிஞ்சிக் குமரி.pdf/220

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 橡 புலவர் கா. கோவிந்தன்

அவள் நிழல்போல் நின்று காக்கும் அத்தோழியின் துணை கிடைத்தால் அது இயலும் என அறிந்தான்்.

ஒருநாள், அத்தோழி தனித்திருக்கக் கண்டு, அவள் பாற் சென்று வணங்கி நின்றான். அவள் ஒரு பெண், தான்் ஒர் ஆண்தகை, தன்னை வணங்கத் தக்காளைத் தான்் வணங்கி நிற்றல், தன் பெருநிலைக்கு இழுக்காம் என்பதையோ, பெண்ணொருத்தியைத் தான்் வணங்கி நிற்பதைப் பிறர் காணின் பழிப்பரே என்பதையோ அவன் எண்ணிப் பார்த்தான்ல்லன். அவற்றை யெல்லாம் எண்ணிப் பார்க்கும் நிலையில், அவன் அப்போது இல்லை. அப் பெண்ணின்மீது அவன் கொண்ட அளவிறந்த காதல், அவன் அறிவுக் கண்களை அவித்து விட்டது. அதனால், தோழியைத் தேடிச்சென்று, அவள் இருக்கும் இடத்தைச் சூழ வருவன்; அவளையே நோக்கி நிற்பன்; அவள் பார்வை தன்மீது வீழ்வதை எதிர்நோக்கி இருப்பன் அவள் தன்னைப் பார்க்குந்தோறும், கைகூப்பி அவளைவனங்குவன்; அயலான் ஓர் ஆடவன், தன்னரு கிருந்து வணங்கி நிற்பதைப் பிறர் காணின், தனக்குப் பழியாமே எனும் அச்சத்தால் அத்தோழி, "வணங்கி இவண் நில்லாதே. வந்த வழியைப் பார்த்துச் செல்யூ リー வாயால் கூறாது, கையை ஆட்டி அறிவித்துப் போமாறு பணிப்பின், கருதி வந்ததைப் பெறாது வறிதே மீளும் தன்னைக் காதல் நோய் பற்றிப் பெரிதும் வருத்துமே என்பதை எண்ணிப் போகாது அவ்விடத்திலேயே நிற்பன்.

இளைஞனின். இந்நிலையினைக் கண்டாள் தோழி. அவனை அங்கு வாராமல் தடுத்துத் தன்னைக் காத்துக் கொள்வது இயலாது என்பதை உணர்ந்தாள். இளைஞன்,