பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

vi குறிஞ்சித் தேன் தேவகுலத்தார், கோப்பெருஞ் சோழன், ஓதலாந்தையார், ஒளவையார் அணிலாடு முன்றிலார் ஆகியவர். இவர்களுள் பாரதம் பாடிய பெருங்தேவனர் என்பவர் சங்க காலத்தில் வழங்கிய பழைய பாரதத்தைப் பாடினவர். அந்த நூல் முற்றும் இப்போது கிடைக்கவில்லை. சில சில பாடல்களே கிடைக்கின்றன. இறையஞர் என்று வழங்கப்பெறும் புலவர் திருவால வாய்ப் பெருமான் என்பதை முன்பே சொன்னேன். தேவ குலத்தார் என்ற பெயர் அந்தப் புலவருடைய இயல்பான பெயர் அல்லவென்று தோன்றுகிறது. தேவ குலம் என்பது கோயிலுக்குப் பெயர். 'ஊராஞேர் தேவ குலம்’ என்ற சொற்ருெடர் பழைய உரைகளில் காணப் பெறுகிறது. இப்புலவர் கோயிலில் வழிபாடு செய்வதையே வாழ்க்கைத் தொழிலாகக் கொண்டிருந்தார் போலும், கோப்பெருஞ் சோழன் என்பவன் முடியுடை வேந்தர் களாகிய சோழ குலத்தில் உதித்தவன். வீரமும், அற நினைவும், புலமையும் உடையவன். அருள், அன்பு என்ற குணங்களைப்பற்றி இவன் பாடியிருக்கிருன். இவன் பாடிய பாடல்கள் வேறு தொகை நூல்களிலும் இருக்கின்றன. ஒதலாந்தையார் என்ற புலவரின் இயற் பெயர் ஆந்தையார் என்பதாக இருத்தல் கூடும். ஒதல் என்பது அவருடைய தொழிலையோ பிற சிறப்பையோ காட்டும் அடைமொழியாக இருக்குமென்று தோன்றுகிறது. ஒதல் என்பது வேதம் ஒதுவதைக் குறிக்கும். அவர் வேதத்திலும் ஒருங்கே சிறந்த புலமையுடையவர் போலும். ஒளவையார் தமிழுலகம் நன்கறிந்த மூதாட்டியார். இவருடைய வரலாற்றைத் தெரிந்துகொள்ளுவதற்கு உதவி யாக இருக்கும் பாடல்கள் பல புறநானூற்றில் உள்ளன. தமிழ்நாட்டில் இப்பெருமாட்டியாருக்கு இருந்த நன்மதிப்பு அளவற்றது. இவருடைய பெயரைக் கொண்டு வேறு ஒரு பெண் புலவர் பிற்காலத்தில் வாழ்ந்தார். அவர் இயற்றிய