பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xiv குறிஞ்சித் தேன் அந்தக் குறத்தியினிடம் சொல்கிருள் தோழி. அந்தப் பேச்சிலிருந்து தலைவிக்குப் பிரியமான ஆடவன் ஒருவன் இருக்கிருனென்பதை நற்ருயும் செவிலித் தாயும் தெரிந்துகொள்ள வேண்டுமென்பதே தோழியின் கருத்து. 農 காதல் நிகழ்ச்சிகளை ஐந்து வகையாகப் பிரித்தார்கள் தமிழர்கள். புணர்ச்சி, பிரிவு. இருத்தல், ஊடல், இரங்கல் என்ற ஐந்து பகுதிகளாகப் பிரித்து அவற்றையே குறிஞ்சி, பாலை, முல்லே, மருதம், நெய்தல் என்று பெயரிட்டு வழங் கினர். இப்படி ஐந்தாகப் பிரித்தாலும் ஒவ்வொரு பிரிவி லும் பல பகுதிகளும் அப் பகுதிகளில் பல துறைகளும் உண்டு. கிட்டத்தட்ட நானுாறு துறைகள் அகப் பொருளில் உள்ளன. இத்துறைகளில் ஒவ்வொன்றிலும் அமைந்த பல பாடல்களைச் சங்க நூல்களில் காணலாம். அப் பாடல்கள் ஒரே துறையில் அமைந்திருந்தாலும், அவற்றில் சொல்லப் பட்ட நிகழ்ச்சி ஒன்றேயாக இருத்தாலும், ஒவ்வொரு பாட லும் தனித் தனிச் சுவையோடு இருக்கும். இதற்குக் காரணம், ஒரே கருத்தைப் புலவர்கள் வெவ்வேறு வகை யிலே சொல்வதுதான். முதற் பொருள், கருப் பொருள் வகைகளின் வருணனைகளில் வேறுபாடு இருக்கும்: சொல்லு கிற முறையிலே வேறுபாடு இருக்கும். உணவு வகைகளை ஆறு சுவைகளுக்குள் அடங்கிலுைம் உலக மக்கள் நுகரும் பண்டங்களில் அந்த ஆறு சுவைகளும் எத்தனை எத்தனை உருவம் எடுக்கின்றன! அப்படித்தான் ஒரு குறிப்பிட்ட துறைக்கு உரிய நிகழ்ச்சி ஒன்றேயானலும், அந்த நிகழ்ச்சிக் குரிய நிலைக்களத்தின் வேறுபாட்டாலும், சொல்லமைப்பின் வேறுபாட்டாலும் பல வகை உருவங்களைப் புலவர்கள் படைத்துக் காட்டுகிருர்கள். அதல்ைதான் அகத்துறைகளை அமைத்து நூற்றுக்கணக்கான பாடல்களை அவர்களால் பாட முடிந்தது. -