பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ഫ്രഞ്ജുT XV d குறுந்தொகையை முன்பு தி. செள, அரங்கசாமி ஜயங்கார் என்ற புலவர் பதிப்பித்தார். போதிய அளவு திருத்தங்கள் அந்தப் பதிப்பில் இல்லை. பல ஆண்டுகளுக்குப் பிறகு என்னுடைய ஆசிரியப் பிரானகிய மகா மகோ பாத்தியாய டாக்டர் ஐயரவர்கள் அந்த நூலேப் பதிப்பித் தார்கள். பல ஆண்டுகள் செய்த ஆராய்ச்சியின் பயனுக மிகவும் அற்புதமான உரை யொன்றை எழுதி, முகவுரை, அகராதி முதலிய அங்கங்களுடன் அதை வெளியிட்டார்கள், அந்தப் பதிப்பு, தமிழ்நாட்டாருக்குக் கிடைத்த அரிய கருவூலம் என்றே சொல்லவேண்டும். . அதை ஆராயும் காலத்திலும் பதிப்பிக்கும் காலத்திலும் ஐயரவர்களுடன் இருந்து பாடங் கேட்டும், ஏவல் செய்தும் வாழும் பேறு எனக்குக் கிடைத்தது. சங்க நூற் செல்வத் தைத் தமிழுலகுக்கு வழங்கிய அப் பெருமானுடைய திருவரு ளால் சங்கச் செய்யுட்களில் சிறிது ஆழும் வாய்ப்புப் பெற் றேன். அதன் பயனுகவே சங்கநூற் காட்சிகள்’ என்ற இந்தப் புத்தக வரிசையை வெளியிடலானேன். நற்றிணையிலிருந்து எடுத்த ஒன்பது ச்ெய்யுட்களின் விளக்கம் மன விளக்கு” என்ற பெயரோடு இந்த வரிசையில் முதற் புத்தகமாக இரண்டு மாதங்களுக்கு முன் வெளியாயிற்று. அதைப் பார்த்த அன்பர்கள், பொருள் விளக்கம் செய்வதில் இது புதிய முறை; நல்ல முறை என்று பாராட்டினர்கள். பத்திரிகைகள் புகழுரை கூறின. இவற் றைக் கண்டபோது முருகன் திருவருளேயும் என் ஆசிரியப் பிரானின் ஆசியையும் எண்ணி அவர்களை வழுத்தினேன், பாராட்டுக் கூறிய அன்பர்கள் அனைவருக்கும் என் நன்றி. சங்கச் செய்யுட்கள் அவ்வளவுக்கும் இப்படியே விளக்கம் எழுதுவது முடியும் காரியம் அன்று. இந்த வரிசையில் வரும் புத்தகங்களைப் படிக்கும் அன்பர்கள் மூல நூலிலுள்ள பாடல் களையெல்லாம் படித்து இன்புறவேண்டும் என்ற ஆர்வத்