பக்கம்:குறிஞ்சித் தேன்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60 குறிஞ்சித் தேன் சொல்வதை நம்பி விடை கொடுத்தாள். அவன் புறப்பட்டான். இப்போது கார்காலம் வந்துவிட்டது. இன்னும் காதலன் வரவில்லை. நேரத்தைக் காட்டும் கடி காரத்தை நாம் வைத்திருக்கிருேம். இறைவன் உல கத்தில் பொழுதையும் பருவத்தையும் காட்டும் இயற் கைக் கடிகாரங்களே வைத்திருக்கிறன். அவற்றிற்கு யாரும் சாவி கொடுக்கவேண்டிய அவசியம் இல்லே. அந்த அந்தப் பொழுதில் மலர்கின்ற மலர்கள் நமக் குப் பொழுதைக் காட்டுகின்றன. காலேயில் சூரியன் வெளிப்படத் தோன்றிலுைம் மேகத்தில் மறைந்துவிட் டாலும் தாமரை மலர்ந்து விடுகிறது. மாலேயில் முல்லே மலர்கிறது; குமுதம் மலர்கிறது. நள்ளிருளில் இருள் வாசி (இருவாட்சி) மலர்கிறது. அந்தியில் அந்தி மந் தாரை மலர்கிறது. இப்படியே ஒவ்வொரு போதிலும் மலரும் மலர்களைச் சங்ககாலப் புலவர்கள் நன்கு அறிந் திருந்தார்கள்.'பொழுதின் முகமலர் வுடையது பூவே?? என்று இலக்கணச் சூத்திரம் ஒன்று சொல்கிறது. தனக் குரிய போதில் மலர்வதல்ைதான் மலரும் பருவத்தி லுள்ள பேரரும்புக்குப் போது என்ற பெயர் வந்தது. காலே, நண்பகல், மாலை முதலியவை சிறு பொழுதுகள். இவற்றைக் காட்டும் மலர்கள் இயற் கையில் அமைந்திருப்பது போலவே பெரும் பொழுது களாகிய ஆறு பருவங்களில் மலரும் மலர்களும் இருக் கின்றன. சங்கச் செய்யுட்களிலிருந்து இந்தச் செய்தியைத் தெரிந்துகொள்ளலாம். ஃ ஃ கன்னித் தமிழ் என்னும் நூலில் உள்ள போதும் பொழுதும் என்ற கட்டுரையைக் காண்க,