பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி | 1 |

'உள்ளே வாருங்களேன் வாசலில் நிற்பானேன்? கதவைத் திறந்து விட்டுக் கூப்பிட்டான் அரவிந்தன். நினைப்பவர் மனதில் வித்தாக விழுந்து கனவுகளை முளைக்கச் செய்யும் அந்த அதியற்புத மாயப் புன்னகை அவன் இதழ்களில் தோன்றி நின்றது. பூரணி உள்ளே போய் உட்கார்ந்தாள். மேஜை மேல் கொஞ்சம் நிலக் கடலைப் பருப்பும் ஒரே ஒரு மலை வாழைப் பழமும், கிளாஸ் நிறையப் பாலும் வைத்திருந்தான். பூரணி அவற்றைப் பார்த்து விட்டுக் கேட்டாள்.

'இதெல்லாம் என்ன? '

'இவை என்னுடைய இரவு உணவு உள்ளே வந்து அவளுக்குச் சற்றுத் தள்ளி நின்று கொண்டு பதில் கூறினான் அரவிந்தன். -

'இந்த சிறிய வாழைப் பழமும், கொஞ்சம் கடலைப் பருப்பும் கொஞ்சம் பாலும் எப்படிப் போதும் உங்களுக்கு?"

இதைக் கேட்டு அரவிந்தன் சிரித்தான்.

'போதுமா, போதாதா என்று தீர்மானம் பண்ணுகிற உரிமையை வயிற்றுக்கு விட்டால், போதாது என்று தான் தீர்மானம் ஆகும். நான் அந்த உரிமையை மனதுக்குக் கொடுத்துப் போதும்' என்று தைரியமாகப் பழகிக் கொண்டு விட்டேன். இது ஏழைகள் நிறைந்த நாடு; மூன்று வேளை அரிசிச் சோறும் நாலாவது வேளைக்குச் சிற்றுண்டியுமாக வாழ்கிறவர்கள், மற்றொரு பக்கத்து நிலைமையையும் நினைத்துப் பார்க்க வேண்டும். ஒரு வேளைக்குக் கூட வயிறு நிறையச் சோறு இல்லா மல் இருப்பவர்கள் எத்தனை ஆயிரம் பேர்கள் இருக்கிறார்கள் இந்த நாட்டில்? அவர்களுடைய குழிந்த வயிற்றுக்காக நூற்றில் ஒருவராவது கவலைப் படவேண்டாமா? அக்கறை காட்ட வேண்டாமா?"

'அதற்காக நீங்கள் அரை குறையாகச் சாப்பிட்டுவிட்டுப் பட்டினி கிடக்க வேண்டுமென்பதில்லையே?"

'தவறு! நான் பட்டினி கிடக்கவில்லை. பகல் உணவைப் பசிக்காக உண்கிறேன். மற்ற நேரங்களில் மனம் நிறைவதற்குத் தான் உண்கிறேன். வயிறு நிறைவதற்கு அல்ல. எனது இந்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/113&oldid=555837" இலிருந்து மீள்விக்கப்பட்டது