பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 147

இருக்கிறது! வாழ்க்கையில் வாழ்க்கை தான் இல்லை என்று கொதிப்போடு எண்ணினாள் அவள். 'ஒரு காலத்தில் வாழ்க்கையில் சந்தேகங்களும் அவநம்பிக்கைகளும் இருந்தன. இப்போதோ அவநம்பிகைகளுக்கும் சந்தேகங்களுக்கும் நடுவில் தான் வாழ்க்கையே இருக்கிறது என்று அரவிந்தன் தன் நோட்டுப் புத்தகத்தில் எழுதியிருந்ததை அவள் மீண்டும் இப்போது நினைத்துப் பார்த்தாள். அந்த வாக்கியங்களின் பொருள், ஆழம் இப்போது அவளுக்கு நன்றாக விளங்கியது. கேவலம் முட்டாள் தனமாக எழுதப்பட்ட ஒரு மொட்டைக் கடிதம் காரியதரிசி அம்மாளின் மனத்தில் சந்தேகத்தை உண்டாக்கு கிறது என்றால் சந்தேகங்களுக்கிடையேதான் வாழ்கிறோம் என்பதில் தவறு என்ன இருக்க முடியும்?"

வழக்கத்தைக் காட்டிலும் அன்று சொற்பொழிவு சற்று விரைவாக முடிந்திருந்ததனால் வீட்டுக்குத் திரும்ப நேரம் ஆகவில்லை. இன்னும் நிறைய நேரம் இருந்தது. மீனாட்சி யம்மன் கோவிலுக்குப் போகலாமென்று அவளுக்குத் தோன்றியது. மனப்புண் ஆறுவதற்கு அந்தப் பெரிய கோவிலின் புனிதமான சூழ்நிலையை அவள் விரும்பினாள். மேற்குக் கோபுரத்தின் கீழே உரித்த பலாச்சுளையைத் தட்டு நிறையப் பரப்பிக் கொண்டு ஈக்களையும், வறுமையும் ஒன்றாக ஒட்டிக் கொண்டிருக்கும் கூடைக்காரிகள், கோவிலுக்குள் போகிறவர்கள் கழற்றிப் போடுகிற பாதரட்சைகளை அவர்கள் திரும்புகிற வரை பாதுகாத்து அந்தப் பாதுகாப்பு வேலைக்குக் காலணாவும், அரையனாவும் கூலி வாங்கி வயிறு வளர்க்கும் ஏழைக் கும்பல், சொந்தத் தலையில் எண்ணையோ பூவோ இன்றி உலகத்துக்குக் கூவிக்கூவிப் பூவிற்கிற பூக்காரிகள். தூக்கணாங் குருவிக் கூடு மாதிரித் தாறுமாறாக முளைத்த தாடிக்கு நடுவே பொந்து போல் வாய் தெரிய ஏதோ கேட்கும் பஞ்சைப் பரதேசிப் பிச்சைக்காரர்கள் - இவர்களெல்லாம் தான் நிரந்தர வசிப்பாளர்கள். மேலே பார்த்து அண்ணாந்து உயர்ந்த கோபுரத்தின் அடியில் கீழே பார்த்து வயிற்றுக்காகக் குனிந்து தேடும் மனிதர்கள். இங்கே போ' 'இங்கே போ' என்று பிடரியைப் பிடித்துத் தள்ளுகிற மாதிரி மேற்குக் கோபுரத்துக்குள் துழைகிற வழியில் நல்ல காற்று

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/149&oldid=555873" இலிருந்து மீள்விக்கப்பட்டது