பக்கம்:குறிஞ்சி மலர்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா.பார்த்தசாரதி 171 குப் போகிற கூட்டமும், முதல் ஆட்டம் விட்டு வருகிற கூட்டமுமாக வீதி பொலிவிழக்காமலிருந்தது.

'நீ கொஞ்சம் விரைவாகவே வந்து விடுவாய் என்று எதிர்பார்த்தேன். நேரமாக்கிவிட்டாய் முருகானந்தம்... இந்தா, இதை நீ வைத்துக் கொண்டு படி நான் சரிபார்க்கிறேன். முடிந்த வரை பார்த்துவிட்டுப் படுக்கலாம்!' என்று சொல்லிவிட்டுக் கையெழுத்துப் பிரதிகளாகிய மூலத்தாள்களை முருகானந்தத்திடம் கொடுத்தான் அரவிந்தன்.

அவற்றைக் கையில் வாங்கிக் கொண்டு "தையல் கடையில் இன்றைக்கு ஒரு வம்பு வந்து சேர்ந்தது. துணியைத் தைத்துக் கொண்டு கடன் சொல்லுகிறவர்களையும் பேரம் பண்ணுகிறவர் களையும்தான் அதிகம் பார்த்திருக்கிறேன். காலையில் ஒரு வெளியூர் மனிதன் தைத்த துணியை வாங்கிக்கொண்டு போகிற போது மணி பர்ஸை மறந்து வைத்துவிட்டுப் போய்விட்டான். வாங்கிக் கொண்டு போக வருவானோ என்று நானாகவே சிறிது அதிக நேரம் காத்திருந்தேன். வழக்கமாக வருகிற மனிதனு மில்லை அவன். ஆனால் எனக்குக் கடையின் நாணயமோ, பேரோ கெட்டுவிடக் கூடாதென்று பயம். அது தான் காத்துப் பார்த்தேன். ஆள் வரக்கானோம். பையைத் திறந்து பார்த்தால் ஏதோ கடிதம், புகைப்படங்கள். இரண்டு மூன்று நூறு ரூபாய் நோட்டுக்கள் எல்லாம் இருக்கின்றன. அதற்காகவே வழக்கமாகக் கடை பூட்டுகிற நேரத்துக்கு மேலும் திறந்து வைத்துக்கொண்டு இருந்தேன், இல்லாவிட்டால் ஒன்பது மணிக்கே இங்கு வந்திருப்பேன்' என்று தாமதத்துக்குக் காரணம் சொன்னான் முருகானந்தம். .

'சரி சரி, நீ படிக்க ஆரம்பிக்கலாம். இன்னும் ஏதாவது கதையளந்து நேரத்தை வீணாக்காதே’ என்று அரவிந்தன் துரிதப்படுத்தவே முருகானந்தம் பேச்சை நிறுத்தி விட்டுப் படிக்கத் தொடங்கினான். பூரணியின் தந்தை பேராசிரியர் அழகிய சிற்றம்பலம் எழுதிய 'தொல்காப்பியர் காட்டும் வாழ்க்கை நெறி - என்னும் புத்தகத்துக்கான அச்சுப் பிரதிகள் அவை: முதல் திருத்தத்துக்கான காலி புரூஃப்கள். ...

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:குறிஞ்சி_மலர்.pdf/173&oldid=555896" இலிருந்து மீள்விக்கப்பட்டது